இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்பவர்களுக்கு ஹெல்மெட் அவசியமா?- அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்

By செய்திப்பிரிவு

திருச்சி,

இருசக்கர வாகனத்தின் பின்னால் இருப்பவர்களுக்கு ஹெல்மெட் அவசியமா என்பது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

திருச்சியில் போக்குவரத்துத்துறை சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம். ஹெல்மெட் அணியாதவர்களுக்கு கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும்

பின்னால் அமர்ந்திருப்பவர்களும் தலைக்கவசம் அணிய வேண்டும் என மோட்டார் வாகனச் சட்டம் உள்ளது. அதை இப்போது நடைமுறைப்படுத்தவே போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர்.

நகர்ப்புறங்களில் கிட்டத்தட்ட 90% பேர் ஹெல்மெட் அணியும் பழக்கத்துக்கு வந்துவிட்டனர். கிராமப் புறங்களில் இதுகுறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. அவர்களைக் கண்காணிப்பது சவாலான காரியமாக உள்ளது.

ஏனெனில் சுமார் ஏழரை கோடி மக்கள் உள்ள தமிழகத்தில், அதிகாரிகள் குறைவாக இருக்கின்றனர். அரசு சட்டங்களைக் கொண்டு வந்து இயற்றலாம். ஆனால் அவற்றைக் கடைபிடிப்பது மக்களின் கடமை. படிப்படியாக அனைத்து மக்களும் ஹெல்மெட் அணியும் நிலை தமிழகத்தில் உருவாகும்'' என்றார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

6 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்