கடந்த மக்களவைத் தேர்தல் முதல் தற்போது எம்பி அலுவலகம் ஒதுக்குவதுவரை எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்த அதிமுக அமைச்சர் செல்லூர் கே.ராஜூவும், மதுரை எம்பி சு.வெங்கடேசனும், மனகசப்புகளை மறந்து இன்று (சனிக்கிழமை) நடந்த மாநகராட்சி விழாவில் ஒரே மேடையில் பங்கேற்று ராசியாகிவிட்டனர்.
மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 4262 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4.43கோடி மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் தலைமை வகித்தார். கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கி பேசினார்.
இவ்விழாவில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டார்.
எம்பி தேர்தலில் சு.வெங்கடேசனை, அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கடுமையாக தாக்கி பேசினார். சு.வெங்கடேசனுக்கு கதை, கவிதை, கட்டுரை நல்ல எழுதுவார். நல்ல எழுத்தாளர். ஆனால், அரசியல் அவருக்கு சரிப்பட்டு வராது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கிண்டல் செய்தார்.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் காரசாரமாக உச்சக்கட்டத்தில் இருந்தபோது மதுரை சுற்றுச்சூழல் பூங்காவில் தற்செயலாக அங்கு வாக்கிங் வந்த அமைச்சர் செல்லூர் கே.ராஜூவும், சு.வெங்கடேசனும் சந்தித்துக் கொண்டனர்.
சர்ச்சைப் பின்னணியும்; சமரசத்துக்கான காரணமும்...
இருவரும் தேர்தல் பிரச்சார மோதலை மனதில் வைத்துக் கொள்ளாமல் பரஸ்பரம் நலம் விசாரித்து பேசிக் கொண்டனர். அதன்பிறகு எம்பியாக சு.வெங்கடேசன் வெற்றி பெற்றபோது அவருக்கு ஏற்கெனவே இருந்த மாஜி எம்பி கோபாலகிருஷ்ணன் பயன்படுத்தி வந்த அலுவலகத்தை மாநகராட்சி நிர்வாகம் கொடுக்க மறுத்தது.
அதன் பின்னணியில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, சு.வெங்கடேசனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த ராஜ்சத்தியன் தந்தையும், அதிமுக எம்எல்ஏவுமான ராஜன் செல்லப்பா ஆகியோர்தான் இருப்பதாக கூறப்பட்டது.
அதனாலே, மாஜி எம்பி கோபாலகிருஷ்ணன் பயன்படுத்திய அலுவலகம் சு.வெங்கடேசனுக்கு சென்றுவிடாமல் இருக்க அவசரம் அவசரமாக ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் சேர்க்கப்பட்டு அங்கு வணிக வளாகம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்ததாக சர்ச்சை எழுந்தது.
இதனால், அலுவலகம் கிடைக்காமல் வெறுத்துப்போன சு.வெங்கடேசன், மாநகராட்சி ஆணையர் விசாகன் மீது அதிருப்தியடைந்தார்.
இந்தநிலையில் சு.வெங்கடேசனுக்கு திடீரென்று மாநகராட்சி நிர்வாகம், மாற்று இடத்தில் எம்பி அலுவலகம் ஒதுக்க முன் வந்ததால் அவர் சமரசமடைந்தார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூதான், சு.வெங்கடேசனுக்கு, எம்பி அலுவலகத்திற்கு இடம் ஒதுக்கி கொடுங்கள் என்று கூறியதின் அடிப்படையிலே மாற்று இடம் வழங்க மாநகராட்சி முன் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, எம்பி அலுவலகம் தொடர்பான சர்ச்சை, மோதல் முடிவுக்கு வந்தநிலையில் இன்று நடந்த மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கும் விழாவில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவும், எம்பி சு.வெங்கடேசனும் கலந்து கொண்டனர்.
கொஞ்சம் கைதட்டுங்க..
இதில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, சு.வெங்கடேசனை புகழ்ந்து தள்ளினார். செல்லூர் கே.ராஜூ பேசுகையில், "புதிய எம்பி சு.வெங்கடேசன் ஓர் இளைஞர், நல்ல எழுத்தார். பல்வேறு புத்தகங்கள் எழுதியுள்ளார். அவரது எழுத்துகளில் நானே மயங்கி உள்ளேன். அவர்தான் இனி மாநகராட்சி திட்டங்களுக்கு நிறைய நிதி தரப்போகிறார்" என்று பேசியதோடு பார்வையாளர்களைப் பார்த்து, அவருக்கு(எம்பிக்கு) கைதட்டுங்கள் என்று என்று உற்சாகப்படுத்தவும் செய்தார்.
திமுக என்ன செய்யும்?
ஒரு புறம் மாநகராட்சி நிகழ்ச்சிகள், அரசு விழாக்களில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்கள் பகீரங்கமாக புகார் சொல்லி வரும்நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்று வெற்றிப்பெற்ற மதுரை எம்பி சு.வெங்கடேசன் தற்போது அதிமுகவினருடன் இணக்கமாக செயல்பட தொடங்கியுள்ளார்.
அதனாலே, அவரை மாநகராட்சி விழாவுக்கு வரவேற்று ஒரே மேடையில் அமைச்சருக்கு அருகிலே அதிகாரிகள் அமர வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது திமுக தரப்பில் எப்படியான அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago