ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம், பணிச் சுமையைக் கூடுதலாக்கி ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். கற்றல் மற்றும் கற்பித்தல் பாதிக்கப்படும். எனவே, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தைக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், ''மழலையர் கல்வி முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி முறை பல்வேறு நடைமுறைச் சிக்கலை ஏற்படுத்துவதோடு மாணவர்களின் கல்வி நலனையும் பாதிக்கும். தற்போது நடைமுறையில் உள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி அமைப்பு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இப்போது மறு சீராய்வு என்ற பெயரில் ஆட்குறைப்பு நடவடிக்கையாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி முறையைக் கொண்டுவருவது பணிச்சுமை மட்டுமின்றி கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும்.
குறிப்பாக தொடக்கக் கல்விக்கும் மேல்நிலைக் கல்விக்கும் முற்றிலும் மாறுபட்ட நடவடிக்கைகளே உள்ளன. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்யும் பொருட்டு தொடக்கக் கல்வியில் ஆடல், பாடல் மற்றும் SABL, SALM முறையில் கல்வியினைக் கற்பித்து வருகின்றனர். இதனை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் எவ்வாறு கையாள முடியும்?
மேலும் அனைவருக்கும் கல்வித்திட்டம் ( SSA), இடைநிலைக் கல்வித்திட்டம் ( RMSA) இதுவரை தனித் தனியாக நடைபெற்றுவந்த நிலையில் இரண்டையும் இணைத்து ஒருங்கிணைந்த கல்வி ( SS) என்று இணைத்ததன் விளைவாக எஸ்.எஸ்.ஏ மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ ஆசிரியர் பயிற்றுநர்கள், மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியரின் கட்டுப்பாட்டிற்குள் வருவது மட்டுமின்றி CRC எனப்படும் வட்டார குறுவள மையங்களும் மேல்நிலைப் பள்ளிக்குள்ளேயே செயல்பட வேண்டும்.
பல வேலைகளை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கும்போது, பணிச்சுமையால் தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை பாதிப்பை ஏற்படுத்தும். கற்றல் கற்பித்தல் பணி முரண்பாடுகளில் சிக்கித் தவிக்கும். மேலும் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி பறிக்கப்படும். எஸ்.எஸ்.ஏ, ஆர்.எம்.எஸ்.ஏ மேற்பார்வையாளர் பதவியும் பறி போகும்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம், பணிச் சுமையைக் கூடுதலாக்கி ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். மழலையர் கல்வி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒரே பள்ளி வளாகத்திற்குள் இருக்கலாம். ஆனால் ஒரே பள்ளியாக செயல்பட்டால் முதலும் முற்றும் கோணலாக மாறிவிடும்.
மறு சீராய்வு என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் ஆட்குறைப்பு நடவடிக்கையின் மூலம் எதிர்காலத்தில் பள்ளிக் கல்வி கேள்விக்குறியாகிவிடும் என்பதால் மாணவர்கள் நலன் கருதி பழைய நடைமுறையே தொடர்ந்திட ஆவன செய்ய வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago