கல்லூரி மாணவர்களின் ‘ரூட் தல’ மோதலைத் தடுக்கும் வகையில் முன்னாள் ‘ரூட் தல’ மாணவர்களின் தற்போதைய நிலையை போலீஸார் விழிப்புணர்வுக்காக வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
பேருந்து மற்றும் ரயில்களில் கல்லூரிக்குச் செல்லும் மாணவர் களிடையே எந்த வழித்தடத்தில் (ரூட்டில்) செல்லும் மாணவர்கள் உயர்ந்தவர்கள் என்பதில் மோதல் ஏற்படுவதுண்டு. இந்நிலையில், கடந்த மாதம் 23-ம் தேதி அரும் பாக்கத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அரிவாளுடன் மோத லில் ஈடுபட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
‘ரூட் தல’ மாணவர்கள் மோதலை முற்றிலும் தடுக்கும் வகையில் சென்னை போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். உளவியல் ரீதியில் மாணவர்களை மனமாற்றம் செய்யும் பணி தற் போது தொடங்கியுள்ளது. அதன் படி, பழைய ‘ரூட் தல’ மாணவர் களை தேடிப் பிடித்து அவர்களது இன்றைய நிலை குறித்து வீடியோ வாக பதிவிட்டு அதை தற்போது சென்னை சிட்டி போலீஸ் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
அதில் ஆதங்கத்துடன் பேசும் முன்னாள் ‘ரூட் தல’ மாணவர் ஒருவர் கண்ணீர் மல்க கூறியுள்ள தாவது:
2011 முதல் 2014 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித் தேன். அம்பத்தூரிலிருந்து மந்தை வெளி நோக்கிச் செல்லும் 41டி பஸ் ரூட்டில் ‘ரூட் தல’யாக இருந்தேன். ‘ரூட் தல’யாக இருந்தபோது 3 வருடம் ஹீரோவாக இருந்தேன். அந்த கெத்தில் மாணவர்களை திரட் டிக் கொண்டு பேருந்தில் எப்போதும் பாட்டுபாடுவது, ஓட்டுநர் பேச்சை கேட்காமல் நடந்து கொள்வது உள்ளிட்ட செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டேன். இது ஜாலியாகவும், கெத்தாகவும் தெரிந்தது.
போகப்போக அந்த ரூட்ல நாங்கதான் மாஸாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தோம்.
எங்களைத் தாண்டி எந்தக் கல்லூரி மாணவர்களும் இருக்கக் கூடாது என நினைத்தோம். நாங்கள் பயணம் செய்யும் பேருந்தில் மாநில கல்லூரி, நந்தனம் கல்லூரி மாணவர்கள் வந்தால் அவர்களை அடித்து உதைத்தோம். இது ஹீரோ மாதிரியே தோன்றியது.
அப்போ அப்பா, அம்மா சொன்ன தையும் கல்லூரிப் பேராசிரியர்கள் சொன்னதையும் கேட்கல. 3-வது வருடம் ‘ரூட் தல’யாக இருந்தபோது 3 மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினேன். இது தொடர்பாக போலீஸார் என் மீது வழக்கு பதிவு செய்தனர். இது பவர்புல்லா, ஹீரோ மாதிரி தெரிந்தது.
தொடர்ந்து டி.பி.சத்திரம் காவல் நிலையத்திலும் என் மீது வழக்கு பதியப்பட்டது. கைது செய்யப்பட்டேன். என் அப்பா மாற் றுத் திறனாளி, அம்மா கூலி வேலை செய்து வந்தார். அந்த வருமானத் தில்தான் நான் கல்லூரியில் படித் தேன். சிறையில் இருக்கும்போது சக மாணவர்கள் யாரும் என்னைப் பார்க்க வரவில்லை. உதவிக்கும் வர வில்லை.
என் அம்மாதான் எனக்காக அழு தாங்க... நான் சிறைக்கு போகும் போது வேறு யாரும் என்னுடன் வரவில்லை. 9 நாள் சிறையில் இருந்தபோதுதான் இதை உணர்ந் தேன். ‘ரூட் தல’யா 3 வருடம் மாஸ் காட்டிகிட்டு ஹீரோவாக இருந்தேன். அது பெரிய விஷயமாக இருந்தது. கல்லூரி முடித்து வெளியே வந்த பின்னர்தான் அது பெரிய விஷயம் இல்லை என எனக்கு புரிந்தது. என் மீது பதியப்பட்ட வழக்குகள் மட்டுமே என்னைப் பின் தொடர்ந்து வருகின்றன.
போலீஸ் தேர்வுக்காக தயாரா னேன். அப்போது எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்று விட்டேன். என் மீது வழக்கு இருந்ததால் என் வேலை தடைபட்டது. அதிகாரியாக இருக்க வேண்டிய நேரத்தில் அக்யூஸ்டாக (குற்றவாளியாக) நிற்கிறேன்.
நான் சிறையில் இருந்தபோது என்னை வெளியே எடுக்க கூட என் பெற்றோரிடம் பணம் இல்லை. இதை நினைத்து கண்ணீர் வடித்தேன். அப்போது என் கூட இருந்த 50 பேரில் ஒருவர்கூட தற்போது இல்லை. சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர்தான் எல்லாம் புரிந்தது. 3 வருடமாக என்னை ஹீரோவாக பார்த்தவர்கள் எல்லாமே இப்போ எங்கோ போய்ட்டாங்க.
என்னை ஜீரோவாக்கி விட்டு விட்டு அவர்கள் ஹீரோவாக எங்கோ இருக்காங்க. இத நான் இப்போ பீல் பண்றேன். போலீஸ் வழக்கு என்னைப் பின் தொடர்ந்து வருது. நான் சாதிக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், அது முடியவில்லை. ‘ரூட் தல’ என்று என்னை தூக்கி விட்டு தூக்கி விட்டு கீழே தள்ளினர். ‘ரூட் தல’ அதிகாரம் எல்லாம் 3 வருடம்தான் என்பது எனக்கு நன்றாக தெரிந்து விட்டது.
அதை நினைத்து தினம் தினம் பீல் பண்ணிக்கிட்டு இருக்கிறேன். நண்பர்களே.....! படிக்கும்போது ‘ரூட் தல’ 3 வருடம்தான். சந்தோஷ மாக இருக்கும். ஆனால், வெளியே அது லைஃப் கிடையாது. இதை அறிவுரையா சொல்லல... அனு பவமா சொல்றேன்... நீங்கள் ஒரு விளையாட்டு வீரராக உருவாகவோ நிறைய படித்து பெரிய நிறு வனத்தில் அமரவோ முயற்சி செய்யுங்கள். அதில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்.
ஓர் அதிகாரியாக இருக்க வேண் டிய எனது கனவு போய் விட்டது. இப்போது தண்ணீர் கேன் போட் டுக் கொண்டு இருக்கிறேன். என் னைப்போல் ‘ரூட் தல’யா நீங்க மாறி வாழ்க்கையை கெடுத்துக்காதீங்க... என கண்ணீர் வடிப்பதுடன் வீடியோ நிறைவடைகிறது.
சுமார் 4.22 நிமிடம் ஓடும் அந்த வீடியோ குறித்து போலீஸார் கூறும்போது, ‘ரூட் தல’ மாயையில் இருக்கும் மாணவர்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தவே இந்த வீடியோ. நாங்கள் எதையும் திரித்து கூறவில்லை. பழைய ‘ரூட் தல’ மாணவரின் அனுபவத்தைக் கூற வைத்துள்ளோம்.
இந்த வீடியோ அனைத்து கல்லூரி மாணவர்களும் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். இது ‘ரூட் தல’ மாயையைப் போக்கும் என்று நம்புகிறோம்’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago