சென்னை மாநகர தெருக்களில் போக்குவரத்துக்கு இடையூறின்றி 45 ஆயிரம் இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்க வேண்டும்: அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை

சென்னை மாநகரத் தெருக்களில் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி 45 ஆயிரம் இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலு வலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ரிப்பன் மாளிகையில்..

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து வீடுகள், அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள் மற்றும் தொழிற் சாலைகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்துவது குறித்து, சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரிய அலுவலர்களுடனான ஆலோ சனைக் கூட்டம் ரிப்பன் மாளிகை யில் நேற்று நடைபெற்றது.

அதில் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தலைமை வகித்து, மழைநீர் கட்டமைப்புகள் அமைப்பது தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

2,12,000 கட்டிடங்களில்..

அப்போது, இதுவரை 2 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உள்ளனவா என ஆய்வு செய்யப் பட்டுள்ளது. அதில் 1 லட்சத்து 15 ஆயிரம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு நல்ல நிலை யில் இருப்பதாகவும், 34 ஆயிரம் கட்டிடங்களில் உள்ள மழைநீர் கட்ட மைப்புகளில் சிறு பராமரிப்பு பணி களை மேற்கொள்ள வேண்டும் என்றும், 62,151 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் கள அதிகாரிகள் தெரி வித்தனர்.

நிலத்தடி நீரை உயர்த்த வேண்டும்

பின்னர் பேசிய ஆணையர் கோ.பிரகாஷ், வடகிழக்கு பருவ மழைக்கு முன்பாக அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்க, அலு வலர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாநகரப் பகுதிகளில் உள்ள தெருக்களில் பொதுமக்களுக்கும், போக்குவரத் துக்கும் இடையூறு இல்லாத வகையில் 45,000 இடங்களைக் கண்டறிந்து, அங்கெல்லாம் மழைநீர் சேகரிப்பு கட்ட மைப்புகளை ஏற்படுத்தி, மழை நீரை சேகரித்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் சென்னை குடிநீர் வாரிய செயல் இயக்குநர் த.பிரபுசங்கர், மாநகராட்சி இணை ஆணையர் ஆர்.லலிதா, துணை ஆணையர்கள் எம்.கோவிந்தராவ், ப.மதுசூதன் ரெட்டி, பி.குமாரவேல் பாண்டியன், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE