மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் தொடர் மழையால் நெல்லை மாவட்டத்தில் 9 அணைகளில் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக அடவிநயினார் கோவில் அணை நீர்மட்டம் 109 அடியாக உயர்ந்தது.
தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு தாமதமாகத் தொடங்கியது. 2 மாதமாக மழை தீவிரம் அடையாததால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர்மட்டம் உயராமல் இருந்தது. குளங்களும் வறண்டு கிடந்தன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இன்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் கோவில் அணைப் பகுதியில் 45 மி.மீ. மழை பதிவானது.
மற்ற இடங்களில் பதிவான மழை அளவு (மில்லிமீட்டரில்) விவரம் வருமாறு:
குண்டாறு அணை- 29, கருப்பாநதி அணை- 24, செங்கோட்டை- 19, கொடுமுடியாறு அணை- 15, பாபநாசம், தென்காசியில் தலா 11, சங்கரன்கோவில்- 10, ராதாபுரம்- 9.20, சேர்வலாறு- 9, கடனாநதி அணை- 6, மணிமுத்தாறு- 5.20, அம்பாசமுத்திரம்- 4.20, சேரன்மகாதேவி- 4, ராமநதி அணை, சிவகிரியில் தலா 3, ஆய்க்குடி- 1.80, பாளையங்கோட்டை- 1.60, நாங்குநேரி- 1.50.
8 அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு:
தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள 11 அணைகளில் 8 அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. 36.10 அடி உயரம் உள்ள குண்டாறு அணை ஏற்கெனவே நிரம்பிவிட்ட நிலையில், மற்ற அணைகளிலும் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 3975 கனஅடி நீர் வந்தது. 155 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 143 அடி உயரம் உள்ள பாபநாசம் அணையில் நீர்மட்டம் 3 நாளில் 25 அடி உயர்ந்து இன்று 90.80 அடியாக இருக்கிறது.
156 அடி உயரம் உள்ள சேர்வலாறு அணை நீர்மட்டம் 3 நாளில் 47 அடி உயர்ந்து 127.10 அடியாக இருக்கிறது.
இதேபோல், 118 அடி உயரம் உள்ள மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 3 நாளில் 8 அடி உயர்ந்து 58 அடியாக இருக்கிறது. அணைக்கு விநாடிக்கு 769 கனஅடி நீர் வந்தது. 200 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
85 அடி உயரம் உள்ள கடனாநதி அணை நீர்மட்டம் 3 நாளில் 14.40 அடி உயர்ந்து 61 அடியாக உள்ளது.
84 அடி உயரம் உள்ள ராமநதி அணை நீர்மட்டம் 3 நாளில் 11 அடி உயர்ந்து 71 அடியாக உள்ளது.
இதேபோல், 72 அடி உயரம் உள்ள கருப்பாநதி அணை நீர்மட்டம் 3 நாளில் 24.61 அடி உயர்ந்து 64.64 அடியாக உள்ளது.
52.50 அடி உயரம் உள்ள கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 3 நாளில் 20.50 அடி உயர்ந்து 49.50 அடியாக உள்ளது.
132.32 அடி உயரம் உள்ள அடவிநயினார் கோவில் அணை நீர்மட்டம் 3 நாளில் 30 அடி உயர்ந்து 109 அடியாக உள்ளது.
மேலும் சில நாட்கள் மழை நீடித்தால் பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, கொடுமுடியாறு, அடவிநயினார் கோயில் ஆகிய அணைகள் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
12 mins ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago