சென்னை
இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு எதிரான பணியிடை நீக்க உத்தரவை, மறு ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் சோமஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு செய்ததாக இந்து சமய அறநிலையத் துறை திருப்பணிப் பிரிவு கூடுதல் ஆணையர் கவிதா கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, தமிழக அரசு அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்து, தன்னை மீண்டும் பணியமர்த்தக் கோரி கவிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், "எனது பணியிடை நீக்கத்துக்கான காரணம் கூறப்படவில்லை. எந்த காரணத்துக்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டேன் என்ற காரணமும் பணியிடை நீக்கத்துக்கான உத்தரவில் இல்லை. எனவே என்னை பணியிடை நீக்கம் செய்து பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும்", என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை இன்று (வியாழக்கிழமை) விசாரித்த நீதிபதி பார்த்திபன், கவிதாவின் சஸ்பெண்ட் உத்தரவை நான்கு வாரங்களில் மறு ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago