சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் 35 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சிங்கம்புணரியில் சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் ஆடிப்பெருக்கை யொட்டி இன்று (சனிக்கிழமை) காலை முத்துவடுகநாதருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
ஐந்து தலை நாகம் தங்க கவசத்தில் முத்துவடுகநாதர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து வணிகர் நல சங்கம் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.
இதற்காக 10:45 மணிக்கு கோயில் முன்பு பெரிய பந்தலில் மலைபோல் சாதம் குவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை அன்னதானம் நடைபெற்றது.
இதில் சிங்கம்புணரி, பிரான்மலை, காளாப்பூர் வேங்கை பட்டி, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 35 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயில், நொண்டி கருப்பர் கோயிலிலும் அன்னதானம் நடைபெற்றது. இதிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago