மூணாறில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி பாறை உருண்டு விழும் இடமாக அறிவிப்பு:  சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுக்க தடை

By என்.கணேஷ்ராஜ்

மூணாறு அருகே நிலச்சரிவு ஏற்பட்ட இடம் பாறை உருண்டு வரும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுக்கவும், அதனருகில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தனுஷ்கோடி - கொச்சின் ரோடு விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் கடந்த 2017-ல் துவங்கியது. ரூ.380 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் துவங்கப்பட்டாலும் மலைப்பகுதி என்பதால் இவற்றை அகலப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

குறிப்பாக போடிமெட்டு - மூணாறு இடையே உள்ள 42 கிமீ. சாலையை இருவழிச்சாலையாக மாற்றுவதில் தேசிய நெடுஞ்சாலை துறையினர்க்கு பெரும் சவாலாக உள்ளது. 

இதற்காக மூணாறு லாக்காடு கேப்ரோடு அருகில் உள்ள மலைப்பாதையில் உள்ள பாறைகளும், மண்திட்டுகளும் வெகுவாய் அகற்றப்பட்டன.
இதில் மலைப்பாதைகளில் பிடிப்புத்தன்மை குறைந்து கடந்த 28-ம் தேதி பலத்த நிலச்சரிவு ஏற்பட்டது. சாலையில் இருந்து 200 மீ உயரத்திலிருந்த பாறைகள் சரிந்து விழுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. 

சாலை முற்றிலும் மேவப்பட்டதால் இருசக்கர வாகனம்கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நிலச்சரிவை சரி செய்வதற்காக ஐந்திற்கும் மேற்பட்ட மண்-பாறை அகற்றும் இயந்திர வாகனங்கள், பாறை உடைப்பு வாகனங்கள் ஈடுபட்டு வருகின்றன. தவிர 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கை இயந்திரம் மூலம் பாறைகளை உடைத்து அப்புறப்படுத்தியும் வருகின்றனர்.
தொடர்ந்து பெரிய பாறைகளை சிறு துண்டுகளாக உடைத்து சாலைக்குக் கீழே தள்ளும் பணியும் நடைபெற்று வருகிறது. 

நிலச்சரிவு ஏற்பட்ட மேற்பகுதி தோட்டங்களில் ஈர மண் அதிகமாக உள்ளது. மேலும் தோட்டங்களில் பாயும் நீர் கசிவாகவும் வெளியேறி வருகிறது. எனவே பிடிப்புத்தன்மை குறைந்து தொடர்ந்து மண் சிறியளவில் சரிந்து கொண்டே இருக்கிறது. எனவே இவற்றை முற்றிலும் அகற்றுவதில் களப்பணியாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது.

தற்போது சாரல் இல்லாமல் மலைப்பகுதியில் சில்லென்ற பருவநிலை நிலவுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பலரும் இங்கு அதிகளவில் வந்து கொண்டிருக்கின்றனர். காரில் வரும் பலரும் இங்கு வந்து நின்று நிலச்சரிவை ஆச்சரியமாகப் பார்ப்பதும், அருகில் சென்று புகைப்படம், செல்பி எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உயரமான பகுதிகளில் இருந்து பாறைகளைப் பெயர்த்து, உடைத்து ஊழியர்கள் சரிவுகளில் உருட்டி விட்டுக் கொண்டே இருக்கின்றனர். ஆனால் சுற்றுலாப் பயணிகள் இந்த ஆபத்தை உணராமல் கேளிக்கை மனோநிலையில் மொபைலில் படம் பிடித்துக் கொண்டே இருக்கின்றனர்.
எனவே தற்போது இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வரவும், புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இது குறித்து அறிவிப்புகளும் சற்று முன்னதாகவே வைக்கப்பட்டுள்ளன.

சீரமைப்புப்பணியில் ஈடுபடுபவர்கள் கூறுகையில், சாலையின் மேல்பகுதியில் பாறைகளை உடைத்து உருட்டித் தள்ளிக் கொண்டிருக்கிறோம். கீழே இருப்பவர்களுக்கு இது தெரியாது. எனவே சில கட்டுப்பாடுகளை விதித்து பணிகளை தொடர்ந்து கொண்டிருக்கிறோம். பெரியஅளவிலான நிலச்சரிவு என்பதால் சரி செய்ய ஒரு மாதமாவது ஆகும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்