மூணாறு நிலச்சரிவை சரிசெய்வதற்கான சீரமைப்புப்பணிகள் மும்முரம்:  ஜீப்களில் பயணிக்கும் பயணிகள்

By என்.கணேஷ்ராஜ்

மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவினை சரி செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேரடிப்போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பூப்பாறையில் இறங்கி தேவிகுளம்,பெரியகானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகள் ஜீ்ப்களில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 

போடிமெட்டு-மூணாறு இடையே உள்ள 42கிமீ. சாலையை இருவழிச்சாலையாக மாற்றும் பணி 2017செப்டம்பரில் துவங்கி நடைபெற்று வருகிறது.

ரோட்டோர சரிவுகளை உயர்த்தி அகலப்படுத்த அதிகப்படியான கற்கள் தேவைப்பட்டன. இதனால் மூணாறு அருகே உள்ள லக்காடு கேப்ரோடு சாலை அருகே உள்ள மலைகள் உடைக்கப்பட்டு அங்கிருந்து கற்கள் எடுத்து வரப்படுகின்றன. 

பாறைகள் வெகுவாய் அகற்றப்பட்டதால் அப்பகுதி பிடிப்புத்தன்மை முற்றிலும் குறைந்திருந்தது. இந்நிலையில் கடந்த 28ம் தேதி அதிகாலையில் இப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. ராட்சத பாறைகளும், மண்திட்டுகளும் ரோட்டில் விழுந்து சிதறின.  

அதிகாலை என்பதால் பெரியளவில் பாதிப்பு இல்லை. 

ஆனால் ரோட்டில் பாறைகளும், மண்திட்டுகளும் விழுந்ததால் மூணாறு-தேனி  போக்குவரத்து தடைபட்டது.

இதனால் போடிமெட்டு பகுதியில் இருந்து பூப்பாறை, ராஜகுமாரி, ராஜாக்காடு, குஞ்சுத்தண்ணி, பள்ளிவாசல் வழியாக சுற்றுவழியில் வாகனங்கள் சென்று வருகின்றன. 

பாறைகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சரிவுகளில் ஈரத்தன்மையான மண் இருப்பதால் தொடர்ந்து அடுத்தடுத்து இவற்றை சரி செய்து கொண்டே இருக்க வேண்டியதுள்ளது. 

ராட்சத பாறைகள் விழுந்ததினால் ரோடும் வெகுவாய் சேதமாகி உள்ளது.  இவற்றையும் சரி செய்து பாறைகளையும் முழுமையாக அகற்றிய பிறகே போக்குவரத்திற்கு இந்த மலைப்பாதை திறந்துவிடப்படும்.  

ரோடு அடைபட்டதால் வாகனங்கள் பூப்பாறையில் இருந்து சுற்றுப்பாதையில் செல்வதால் தேவிகுளம், பெரியகானல், யானை இறங்கல் உள்ளிட்ட பகுதிக்கான நேரடிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்தபயணிகள் பூப்பாறையில் இருந்துஜீப் மூலம் இப்பகுதிச் சென்று வருகின்றனர்.

சீரமைப்புப் பணி சில நாட்களில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும் இவற்றைச் சரி செய்ய இன்னும் இரண்டு வாரத்திற்கும் மேல்  ஆகும் என்று களப்பணியாளர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்