ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி கோயிலுக்கு வந்த பக்தர்களில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளதாக காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய இரு மாவட்ட எல்லைக்கு உட்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தரை மட்டத்தில் இருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்.
இந்தக் கோயிலில் வருடந்தோறும் ஆடி அமாவாசை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.
அதேபோல இந்த ஆண்டிற்கான ஆடி அமாவாசை திருவிழா நேற்று நடைபெற்ற நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடந்த 27 ஆம் தேதி முதல் இன்று வரை மொத்தம் 6 நாட்கள் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
கடந்த 27-ம் தேதி முதல் தற்போது வரை சதுரகிரி கோயிலுக்கு வந்த மதுரையைச் சேர்ந்த முருகேசன் மற்றும் சந்தானம், உசிலம்பட்டியைச் சேர்ந்த ராஜசேகர , நெல்லையைச் சேர்ந்த சுசீலா என மொத்தம் 4 பேர் மாரடைப்பால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago