சென்னையில் முறையாக மழை நீரை சேகரிக்கும் வீடுகளுக்கு பச்சை ஸ்டிக்கர்கள்

சென்னையில் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை முறையாகப் பின்பற்றுவர்களைப் பாராட்டும் வகையில், அவர்களின் வீடுகளில் பச்சை நிற ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், ''மழைநீர் சேகரிப்பு குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழு ஏற்கெனவே இயங்கி வருகிறது. சென்னையில் சிறிய வீடுகள், பெரிய அபார்ட்மெண்ட்கள்,  மால்கள், தியேட்டர்கள், தனியார் நிறுவனங்கள் என மொத்தம் 12.5 லட்சம் கட்டிடங்கள் உள்ளன. 

இதில் சுமார் 1.42 லட்சம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு குறித்த ஆய்வை முடித்துள்ளோம். அதில் 77 ஆயிரம் கட்டிடங்களில் நல்ல நிலையில், நன்றாக இயங்கக்கூடிய வகையில், மழைநீர் சேகரிப்பு வசதி உள்ளது. அவ்வாறு முறையாகப் பராமரிக்கப்படும் வீடுகளில், 'மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது' என்று பச்சை நிற ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகின்றன. 

ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்கள், அபார்ட்மெண்ட்கள், உணவகங்கள், மால்கள் ஆகிய இடங்களில் உருவாகும் குப்பைகளை அவர்களே கையாள வேண்டும். மத்திய அரசு 3 ஆண்டுகளுக்கு முன்பே இதுதொடர்பாக சட்டம் இயற்றியுள்ளது. அதை நடைமுறைப்படுத்தச் சொல்லி வலியுறுத்தி உள்ளோம்'' என்று தெரிவித்தார்.
 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்