சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் 12 அடி நீள சுவர் உட்பட 3 சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கீழடியில் 2015-ல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இதை பரிசோதித்ததில் 2,500 ஆண்டுகள் பழமையான நகர நாகரிகம் கீழடியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து மத்திய தொல்லியல்துறை 2 மற்றும் 3-ம் கட்ட அகழாய்வோடு நிறுத்திக்கொண்டது. இதையடுத்து தமிழக தொல்லியல்துறை 4-ம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது.
தொடர்ந்து 5-ம் கட்ட அகழாய்வு ஜூன் 13-ம் தேதி தொடங்கியது. கடந்த மாதம் கருப்பையா என்பவருக்குச் சொந்தமான இடத்தில் மண்பாண்ட ஓடுகள், பானைகள், அழகு பொருட்கள் கிடைத்தன.
முருகேசன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் இரட்டைச் சுவர் கண்டுபிடிக்கப்பட்டது. மாரியம்மாள் என்பருக்குச் சொந்தமான நிலத்தில் ஒரு குழியில் 3 அடி அகல சுவர் கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்று முருகேசனுக்கு சொந்தமான நிலத்தில் இரட்டை சுவருக்கு அருகிலேயே 4 அடி உயர உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதே நபருடைய நிலத்தில் ஒரு குழியில் 3 அடி உயரத்தில் 5 அடி நீளத்தில் 2 அடி அகல சுவரும், மற்றொரு குழியில் அகலமான சுவரும் கண்டுபிடிக்கப்பட்டன. ஐந்து அடி நீள சுவரில் 3 அடுக்காக செங்கல்கள் உள்ளன.
இதேபோல் போதகுரு என்பவருக்குச் சொந்தமான இடத்தில் 12 அடி நீளத்தில் ஒரு அடி உயரத்தில் 2 அடி அகலத்தில் ஒரு சுவர் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து சுவர்களும், உறைகிணறும் கிடைத்ததால் அகழாய்வு தீவிரமடைந்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago