ஆடி அமாவாசை திருவிழாவை ஒட்டி பக்தர்கள் இன்று காலை முதல் சதுகிரி மலைக்குச் செல்லத் தொடங்கினர்.
வரும் 31-ம் தேதி ஆடி அமாவாசை. அதையொட்டி சதுரகிரியில் உள்ள அருள்மிகு சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் திருக் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இதற்காக இன்று முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முதல் நாளான இன்று (ஜூலை 27) காலை 6 மணிமுதல் சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்லத் தொடங்கினர். அதிகாலையிலேயே சுமார் 3000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
பக்தர்களின் வசதிக்காக அடிவார பகுதியான தாணிப்பாறையில் மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 7000 வாகனங்கள் நிறுத்துவதற்காக பார்க்கிங் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்காக மலைப்பாதையில் ஐந்து இடங்களில் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சதுரகிரி மலையில் திருக்கோயில்கள் அமைந்துள்ள பகுதியில் பக்தர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கஞ்சி காய்ச்சி அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு கடும் வறட்சி காரணமாக சதுரகிரி மலையில் அன்னதான கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் சதுரகிரி மலைக்குச் செல்லும் பக்தர்களின் உடமைகள் அனைத்தும் அடிவாரப் பகுதியான தாணிப்பாறை வனத்துறை நுழைவு கேட் பகுதியில் வனத்துறையினர் மற்றும் போலீஸார் சார்பில் தீவிர சோதனை நடத்தப்பட்டு எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க 12 இடங்களில் காவல் துறை சார்பில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சதுரகிரி மலையில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக இரவு நேரங்களில் பக்தர்கள் தங்குவதை தவிர்க்குமாறு வனத்துறை காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக விருதுநகர் மற்றும் மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் சுமார் 2000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மலைப்பகுதியில் தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணிக்க நக்சல் தடுப்பு பிரிவு போலீஸார் நவீன ரக துப்பாக்கிகளுடன் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
34 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago