மெட்ரோ ரயில் நிலையங்களில் உணவு பொருட்கள் விற்பனை தொடங்க முடிவு

சென்னை

பொதுமக்களை கவரும் வகையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் உணவுப் பொருட்கள் விற்பனை மையங்கள் விரைவில் திறக்கப்பட வுள்ளன.

சென்னையில் தற்போது 2 வழித் தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு தினமும் மெட்ரோ ரயில் கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரல், எழும்பூர், விமான நிலையம், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் உள் ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு மெட்ரோ ரயில்சேவை கிடைப்ப தால், பயணிகளின் எண் ணிக்கை படிப்படியாக அதி கரித்து வருகிறது. சில நாட் களில் தினசரி பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தையும் தாண்டுகிறது.

பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க மெட்ரோ ரயில் நிலையங்களில் பல்வேறு வசதி களை நிர்வாகம் மேம்படுத்தி வருகிறது. தேர்வு செய்யப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் தலா 10 முதல் 35 சதுர அடிகளில் சிறிய உணவுப் பொருட்கள் விற்பனை மையங்களை அமைக்க மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு டெண்டர் வெளியிட்டது.

அதன்படி, தற்போது சில நிறு வனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் கோயம்பேடு, திரு மங்கலம், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய்நகர், கீழ்ப்பாக்கம், நேருபூங்கா மெட்ரோ ரயில் நிலையங்களில் உணவு விற் பனை மையங்கள் அடுத்தமாதம் இறுதிக்குள் அமைக்கப்படவுள் ளன. இங்கு உணவு தின்பண் டங்கள், குளிர்பானங்கள் விற்கப் படவுள்ளன. ஏற்கெனவே, ஆலந்தூர், வடபழனி, அசோக் நகர், விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையங்களில் தனியார் நிறுவனங்கள் மூலம் உணவகங் கள் நடத்தப்பட்டு வருவது குறிப் பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்