வேலை வேண்டுமா?- ரூ.49 ஆயிரம் சம்பளத்தில் கப்பல் நிறுவனத்தில் அரசு வேலை

By க.சே.ரமணி பிரபா தேவி

மும்பையில் மத்திய பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும்,  Mazagon Dock என்னும் கப்பல் கட்டும் நிறுவனத்தில் எலக்ட்ரீசியன், ரிக்கர்ஸுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள், தகுதியானவர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்த விவரங்கள் பின்வருமாறு:

1. வேலையின் பெயர்: Riggers 
கல்வித்தகுதி:  குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Rigger டிரேடில் NAC சான்று பெற்று, பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும். 
காலியிடங்கள்: 217

2. வேலையின் பெயர்: Electrician
கல்வித்தகுதி:  குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Electrician டிரேடில் NAC சான்று பெற்று, பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும். 
காலியிடங்கள்: 149

வயது வரம்பு: 01.07.2019-ல் 18 முதல் 38 வயதுக்குள் இருக்கவேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்களும்  மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படியும் தளர்வு வழங்கப்படும்.
சம்பளம்: ரூ13,200 -  ரூ.49,910

தேர்வு முறை:
1. ஆன்லைன் எழுத்துத் தேர்வு 
2. பணி அனுபவம், டிரேடு தேர்வு
3. சான்றிதழ் சரிபார்ப்பு 

ஆன்லைன்எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 31.08.19.

எப்படி விண்ணப்பிப்பது?
ஆன்லைன் மூலம் https://mazagondock.in/Career-Non-Executives.aspx என்ற இணைய முகவரியைக் க்ளிக் செய்து அதில் கூறப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்
ரூ.100. ஆன்லைன் மூலமாக மட்டுமே பணத்தைச் செலுத்த முடியும்.
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.07.2019

இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு: https://mazagondock.in/writereaddata/career/Advt_No_89_722019105043AM.pdf  என்ற இணையதளத்தை அணுகலாம். 

- க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்