மழைநீர் சேகரிப்பு குறித்து ஆய்வு செய்யாமலே நோட்டீஸ் அளிக்கும் மாநகராட்சி அலுவலர்கள்: தீவிர கண்காணிப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை

By செய்திப்பிரிவு

எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு 

மழைநீர் சேகரிப்பு வசதி குறித்து ஈரோடு மாநகராட்சி அலுவலர்கள் பெயரளவிற்கு ஆய்வு செய்து, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் கடும் வறட்சி மற்றும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயலாக்குவதில் தீவிரம் காட்ட வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, ஈரோடு மாநகராட்சி அலுவலர்கள், வீடு, கடை, வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்களில் ஆய்வு மேற்கொள்ளவும், மழைநீர் சேகரிப்பு வசதி இல்லாத கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்கவும் உள்ளாட்சித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சியில் இப்பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள அலுவலர்கள் வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்து, அறிக்கை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஆய்வுப்பணிக்கு வரும் மாநகராட்சி அலுவலர்கள், எவ்வித ஆய்வும் மேற்கொள்ளாமல், பெயர், விவரம், செல்போன்எண் போன்ற விவரங்களை மட்டும் சேகரித்துக் கொண்டு, கையெழுத்துப் பெற்று வருகின்றனர். இதன் தொடர்ச்சி யாக, 15 நாட்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற எச்சரிக்கை நோட்டீஸை வழங்கி வருகின்றனர்.

வாடகை வீட்டில் குடியிருப் போர், வாடகை செலுத்தி கடை நடத்துவோரிடம் இது போன்ற எச்சரிக்கை நோட்டீஸினை வலுக் கட்டாயமாகக் கொடுக்கின்றனர்.

குறிப்பாக ஈரோடு சம்பத்நகர் பகுதியில் உள்ள அரசு வீட்டுவசதிவாரியக் குடியிருப்புகளில் மழை நீர் கட்டமைப்பு வசதி செய்யப்படவில்லை. இந்த அடுக்குமாடி வீடுகளில் வாடகைக்கு குடியிருப்போரிடம், மாநகராட்சி அலுவலர்கள் எச்சரிக்கை நோட்டீஸை கொடுத்துவிட்டு கையெழுத்துப் பெற்று சென்று வருகின்றனர். மழைநீர் சேகரிப்பை வீட்டுவசதி வாரியம்தான் மேற்கொள்ள வேண்டும் என்றும், அந்த துறை அலுவலகத்தில் இந்த அறிவிப்பு நோட்டீசினை கொடுக்க வேண்டும் என பலர் வலியுறுத்தியும், மாநகராட்சி அலுவலர்கள் அதனை ஏற்காமல், எச்சரிக்கை நோட்டீசினை வழங்கி வருகின்றனர்.

இது குறித்து குடியிருப்புவாசிகள் கூறும்போது, ‘சம்பத்நகரில் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீட்டுவசதி வாரிய வீடுகளில், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. மாவட்ட நிர்வாகமோ, மாநகராட்சி நிர்வாகமோ வீட்டுவசதி வாரியத்துக்கு இது தொடர்பாக அறிவுறுத்தி, கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். மாறாக, வாடகைக்கு குடியிருப்போரிடம் நோட்டீஸ் வழங்கி, கையெழுத்துப் பெற்றுச் செல்வது என்பது போலியாக கணக்கு காட்டுவதற்கே உதவியாய் இருக்கும்’ என்றனர்.

போலி ஊர்வலங்கள்

இதேபோல், மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக கணக்கு காட்டுவதற்காக, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்படுகின்றன. பெயரளவிற்கு நடத்தப்படும் இந்த விழிப்புணர்வு பேரணிகளால், எவ்வித பலனும் ஏற்படப்போவதில்லை என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கல்வி நிறுவனத்தினர் கூறும்போது, ‘ஈரோடு அரசு மருத்துவமனையில் காலை 8 மணிக்கு பயிற்சிக்காக வாகனங்களில் செல்லும் தனியார் செவிலியர் கல்லூரி மாணவியரை, ஆட்சியர் அலுவலகம் அருகே இறங்க வைக்கின்றனர். அங்கிருந்து அரசு மருத்துவமனை வரை மழை நீர் சேகரிப்பு பேரணி என நடக்க வைத்து, தங்களது பணியை முடித்துக் கொள்கின்றனர். மழைநீர் சேகரிப்பை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், உண்மையான கண்காணிப்பையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்