உற்பத்தி திறன் 20% அதிகரிக்கப்பட்டதால் 24 மணி நேரத்தில் காஸ் சிலிண்டர் விநியோகம்: இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல் 

திருச்சி

பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் வாடிக்கையாளர்களுக்கு காஸ் சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என இந்தியன் ஆயில் கார்ப்பரே ஷன் (ஐஓசி) அதிகாரிகள் தெரி வித்தனர்.

திருச்சி இனாம்குளத்தூரில் உள்ள இண்டேன் எல்பிஜி பாட்லிங் தொழிற்சாலைக்கு நேற்று வந்த தென்மண்டல பொதுமேலாளர் (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ்) ஆர்.சிதம்பரம் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

இண்டேன் வீட்டு உபயோக எல்பிஜி-க்கு தமிழ்நாட்டில் 1.60 கோடி வாடிக்கையாளர்கள் உள்ள னர். தமிழ்நாட்டில் 57.7 சதவீத மார்க்கெட், ஐஓசியின் இண்டேன் எல்பிஜி வசம் உள்ளது. தமிழ்நாட்டி லேயே திருச்சி தொழிற்சாலையில் மட்டுமே 5 கிலோ காஸ் சிலிண்டர் நிரப்பும் வசதி உள்ளது. திருநெல் வேலியில் அமைக்கப்படும் புதிய பாட்லிங் ஆலை, மாசுக் கட்டுப் பாட்டு வாரியத்தின் சான்றிதழ் கிடைத்தவுடன் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்” என்றார்.

எல்பிஜி தமிழ்நாடு பொது மேலாளர் ஆர்.ராஜேந்திரன் கூறியதாவது:

தமிழ்நாட்டிலுள்ள எல்பிஜி பாட்லிங் தொழிற்சாலைகள் மூலம் நாளொன்றுக்கு 2.76 லட்சம் சிலிண்டர்கள் நிரப்பப்படுகின்றன. ஆண்டுதோறும் வாடிக்கையாளர் களின் தேவை 5 சதவீதம் அதி கரித்து வரும் நிலையில், உற்பத்தித் திறன் 20 சதவீதம் அதிகரிக்கப்பட் டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டி லுள்ள வாடிக்கையாளர்களுக்கு, பதிவு செய்த 24 மணி நேரத்துக் குள் காஸ் சிலிண்டர் விநியோகம் செய்யப்படும்.

சிலிண்டர்களை விநியோகிக் கும்போது, வாடிக்கையாளர்கள் அதற்குரிய பில் தொகையை மட்டும் செலுத்தினால் போதும். டெலிவரிக்கு கூடுதலாக பணம் கேட்டால், பில்லில் குறிப்பிட் டுள்ள தொலைபேசி எண்கள், இ-மெயிலில் புகார் செய்யலாம். திருச்சி மண்டலத்தில் அவ்வாறு புகார் வரப்பெற்ற 4 ஏஜென்சி களுக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE