கருப்புக் கொடி காட்டிய வைகோ கையெடுத்து கும்பிடுகிறார்: காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பேட்டி

By செய்திப்பிரிவு

காங்கிரஸ் ஆட்சியின்போது, ராஜபக்சே இந்தியா வந்தபோது கருப்புக் கொடி காட்டிய வைகோ, இப்போது பாஜக ஆட்சியில் கையெடுத்து கும்பிட்டு கோரிக்கை வைக்கிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறியுள்ளார்.

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா வரும் 26-ம் தேதி நடக்கிறது. இதில் இலங்கை அதிபர் ராஜபக்சே உள்பட சார்க் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதற்கு தமிழகத்தில் வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு கட்சித்தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் அளித்த பேட்டி வருமாறு:

மோடி பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்திருக்கிறார்களே, இது சரியா?

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் சம உரிமை, 13-வது அரசியல் சட்டம் நிறைவேற்றம், போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை மற்றும் நடவடிக்கை ஆகியவை தேவை என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் மாற்றுக் கருத்து இல்லை. அதேநேரம் இவை எல்லாவற்றையும் நிறைவேற்ற வேண்டுமானால் இலங்கை அதிபருடன்தான் பேச வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இலங்கை என்பது நம் அண்டை நாடு. தெற்காசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடு. இலங்கையுடன் நட்புறவில் இருப்பதுதான் இந்தியாவுக்கு நல்லது. அதுதான் ராஜதந்திரம். அதே நேரம், தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்தியில் காங்கிரஸ் அரசு செயல்பட்டதுபோல, புதிய அரசும் அந்தப் பணியைச் செய்யும் என நம்புகிறேன்.

இலங்கை அதிபர் ராஜபக்‌சே இந்தியா வரக்கூடாது என்று வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளாரே?

இலங்கை விவகாரத்தில் இலங்கைத் தமிழரின் நன்மை என்பதைவிட உணர்ச்சியின் பால்தான் தமிழகத்தின் சில அரசியல் கட்சிகள் பேசுகின்றன என்பது நாம் அறிந்ததே. ஒரு வித்தியாசம் என்னவென்றால், காங்கிரஸ் ஆட்சியின் போது இந்திய எல்லைக்கு மேலே ராஜபக்சே விமானம் பறந்தபோது கீழே இருந்து கருப்புக் கொடிகாட்டினர். ஆனால், இப்போது ஒரு கட்சியோ இதுபற்றி கருத்து சொல்ல ஒருநாள் வாய்தா கேட்கிறது.

இன்னொரு கட்சித் தலைவரோ கையெடுத்துக் கும்பிட்டு இது வேண்டாம் என்று கோரிக்கை வைக்கிறார். இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்