காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாங்கனிகளை வீசி இறைவனை பக்தர்கள் வழிபடும் பிச்சாண்டவர் வீதியுலா நேற்று நடைபெற்றது.
காரைக்கால் கைலாசநாத சுவாமி, நித்ய கல்யாணபெருமாள் வகையறா தேவஸ்தானத்துக்கு உட்பட்ட காரைக்கால் அம்மையார் கோயிலில் கடந்த 13-ம் தேதி மாப் பிள்ளை அழைப்புடன் தொடங்கி யது. திருவிழாவின் முக்கிய நிகழ் வான, மாங்கனிகளை வீசி இறை வனை பக்தர்கள் வழிபடும் பிச்சாண் டவர் வீதியுலா நேற்று நடந்தது.
இதையொட்டி, நேற்று அதி காலை சிவபெருமான் பிச்சாண்ட வர் கோலத்தில் கையில் மாங்கனி யுடன் பவழக்கால் சப்பரத்தில் எழுந் தருளினார். காலை 6 மணியளவில் கைலாசநாதர் கோயிலில் இருந்து வீதியுலா தொடங்கியது.
வேதபாராயணங்கள் முழங்க பல்வேறு வீதிகள் வழியாக நேற்று மாலை வரை நடைபெற்ற வீதியுலா வில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இறைவனுக்கு மாங்கனி களை படைத்தனர்.
வீடுகள், கடைகள் மற்றும் மாடிக ளில் கூடியிருந்த ஏராளமான பக்தர் கள் நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக மாங்கனிகளை வீசி இறை வனை வழிபட்டனர். அவ்வாறு வீசப் படும் மாங்கனிகளை இறைவனுக் குப் படைக்கப்பட்ட பிரசாதமாகக் கருதி, ஏராளமான பக்தர்கள் அவற் றைப் பிடித்து வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். நிறைவாக மகா தீபாராதனை நடைபெற்றது.