மோசமான சுற்றுலாப் பயண அனுபவம்: நீதிபதிகளிடம் லண்டன் பயணி முறையீடு- குற்றாலம் அருவியில் அடிப்படை வசதி கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

குற்றால அருவிப்பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்யக் கோரிய வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் நீதிமன்றத்தில் திடீரென ஆஜராகி, குற்றாலம் பயணத்தின்போது தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை நீதிபதிகளிடம் விவரித்தார்.

பழைய குற்றாலம் அருவியில் குளிக்கச் செல்லும் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்யக் கோரி தாக்கலான மனு மீதான விசாரணை, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு வந்தது.

பொதுப்பணித்துறை செயற் பொறியாளரின் பதில் மனுவை, அரசு வழக்கறிஞர் கே.பி. கிருஷ்ணதாஸ் தாக்கல் செய்தார். இதன்மீதான விசாரணை நடந்த போது, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பொன்னம்பலம் கருணாநிதி (49) திடீரென நேரில் ஆஜரானார். ஜெர்மனியில் பிறந்த இவர் தற் போது லண்டனில் வசித்து வருகிறார்.

இலங்கைத் தமிழரான அவர், நீதிபதிகளிடம் கூறும்போது, கடந்த மே 22-ம் தேதி குற்றாலத்துக் குச் சென்றேன். அங்கு சுற்றித் திரியும் நிறைய புரோக்கர்கள் சுற்றுலாப் பயணிகளை ஏமாற்று கின்றனர்.

எங்குமே சுத்தம் இல்லை. அசுத்தம்தான் நிறைந்துள்ளது. வழிகாட்டிகள் இல்லை. பாது காப்பு கிடையாது. பயணிகளின் பொருள்களை பாதுகாக்க வசதிகள் இல்லை என்றார்.

அதன்பின்னர், நீதிபதிகள் உத்தரவின்படி கருணாநிதி மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். அதில் குற்றாலத்தில் அனைத்து அருவிகளுக்கும் பஸ்களை இயக் கவும், புரோக்கர்களை கட்டுப் படுத்தவும், பயணிகளுக்கு போதிய வசதிகளை செய்து கொடுக்கவும் உத்தரவிட கோரியிருந்தார்.

பின்னர், மனுதாரர் வழக்கறிஞர் வீரா கதிரவனும் அரசு வழக்கறிஞ ரும் வாதிட்டனர். அப்போது குறுக் கிட்ட நீதிபதிகள், குற்றாலத்தில் அனைத்தும் சட்டப்படி நடக்கிறதா வசதி இருக்கிறதா என்பது எங்கள் கேள்வி.

இல்லாவிட்டால், உரிய உத்தரவு பிறப்பிக்க போகிறோம். குறைகளைக் கண்டுபிடிப்பது எங்களது நோக்கமல்ல. குற்றாலத் தில் குளித்தால் தெளிவு பிறக்கும் என்பார்கள்.

தற்போது அருவியில் குளித்தால், உடல் நலத்துடன் திரும்ப முடியாத நிலை உள்ளது. திறந்தவெளியில் மது குடிக்கின் றனர். குற்றாலத்தில் மது குடிப்ப தற்கு தடை விதிக்கலாம் என்றனர்.

இதனிடையே நெல்லை எஸ்பி நரேந்திநாயர், தென்காசி டிஎஸ்பி அரவிந்தன் ஆகியோர் போலீஸார் பாதுகாப்பு பணி குறித்து விவரித்த னர். இம்முறை கடந்த ஆண்டைவிட அதிக அளவு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என உறுதியளிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ‘குற்றாலம் காவல் நிலையத்தில் கூடுதல் போலீஸார் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை சோதனையிட போலீஸாருக்கு போதையின் அளவை கண்டுபிடிக்கும் கருவி வழங்க வேண்டும், நடமாடும் மருத்துவ மையம் அமைக்க வேண்டும் என்றனர். பின்னர் தீர்ப்பு கூறுவதை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்