பள்ளி மாணவர்களை அளவுக்கு அதிகமாக ஏற்றிச்செல்லும் வாகனங்களால் பெரும் விபத்து ஏற்படும் முன் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மட்டுமின்றி அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளும் ஆட்டோக்கள், ஆம்னி வேன்கள், மேக்ஸிகேப் போன்ற வாகனங்களில் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். பள்ளிக்குச் சொந்தமான பேருந்துகள், வேன்களில் மட்டுமே மாணவ, மாணவிகளை ஏற்றிச்செல்ல அனுமதி உண்டு என்பதை பெற்றோர் மறந்து விடுகின்றனர்.
பள்ளி பேருந்துகளைவிட குறைந்த கட்டணம் வாங்கிக்கொண்டு தனியார் வேன்களில் மாணவ, மாணவிகள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இதனால் நடுத்தர வர்க்கத்துப் பெற்றோர், தங்கள் குழந்தைகளை தனியார் வாகனங்களில் பள்ளி சென்றுவர அனுமதிக்கின்றனர். அதுவே அவர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படும் என்பதை பெற்றோர் பலர் அறிவதில்லை.
விருதுநகரில் இருந்து அரசு உதவிபெறும் ஒரு பள்ளியில் படிக்கும் 18 மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு சிவகாசி சாலையில் உள்ள குமாரலிங்கபுரம் சென்ற ஆம்னி வேன் ஒன்று காஸ் கசிவால் நேற்று முன்தினம் திடீரென தீப்பற்றி எரிந்தது. வேனுக்குள் புகை வந்ததும் ஓட்டுநர் கரிகாலன் வேனை நிறுத்திவிட்டு மாணவ, மாணவிகளை பத்திரமாக மீட்டுள்ளார். இதனால் 18 மாணவ, மாணவிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மீட்புப்பணி சற்று தாமதமாகியிருந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும்.
இதுபோன்று விதிமுறைகளுக்கு மாறாகப் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. பள்ளி வாகனங்களை இயக்குவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், தனியார் மற்றும் சுயநிதிப் பிரிவு பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பள்ளி வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்த வேண்டும். தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த ஒட்டுநர், நடத்துநர் பணியமர்த்தப்பட வேண்டும். மருத்துவமனை, பள்ளி, கல்லூரி வளாகம், பாலம், நீர் நிலைகள் போன்ற இடங்களில் பிற வாகனங்களை முந்திச்செல்லக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லும் தனியார் வாகனங்களுக்கு யாரும் எந்தக் கட்டுப்பாடுகளும் விதிப்பதில்லை. இதனால், தனியார் சுற்றுலா வாகனங்களிலும் பள்ளிக் குழந்தைகள் ஏற்றிச்செல்லப்படுகின்றனர். இது குறித்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சோமசுந்தரம் கூறியதாவது:
பள்ளிக்குச் சொந்தமான வாகனங்களில் இருக்கைகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு மாணவர்களை ஏற்றிச்செல்ல வேண்டும். ஆட்டோக்களில் 6 மாணவ, மாணவிகள் மட்டுமே ஏற்றிச்செல்ல அனுமதி உண்டு.
இதுதவிர, மாதக் கட்டணத்தில் ஒப்பந்த அடிப்படையில் கார்கள், ஆம்னி வேன்கள், மேக்ஸிகேப் போன்ற சுற்றுலா வாகனங்களில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லக் கூடாது. இது போக்குவரத்து விதிமுறைகளுக்கு புறம்பானது.
இதுபோன்று, வாடகை வாகனங்களில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச்செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் வாகனத்துக்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, அதன் உரிமையாளர் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago