மருத்துவர்களுக்கு சவுதி அரேபியாவில் அரசு பணிவாய்ப்பு: தமிழக அரசு நிறுவனம் அறிவிப்பு

சவுதி அரேபிய அரசின் சுகாதார அமைச்சகக் குழுவினர் அலோபதி மருத்துவர்கள தேர்வுசெய்வதற்காக டெல்லி, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய இடங்களில் நேர்முகத்தேர்வு நடத்த உள்ளனர்.

தமிழக அரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.சமயமூர்த்தி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சவுதி அரேபிய அரசின் சுகாதார அமைச்சகக் குழுவினர் அலோபதி மருத்துவர்களை ( பல் மருத்துவர், பேதாலஜிஸ்ட் தவிர) தேர்வுசெய்வதற்காக டெல்லி, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய இடங்களில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நேர்முகத்தேர்வு நடத்த உள்ளனர்.

சிறப்பு மருத்துவர் பணிக்கு வயது 55-க்குள்ளும், உறைவிட மருத்துவர் பணிக்கு வயது 45-க்குள்ளும், பொது மருத்துவர் பணிக்கு (எம்பிபிஎஸ்) வயது 40-க்குள்ளும் இருக்க வேண்டும். விருப்பமுள்ள மருத்துவர்கள் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களைப் பற்றிய முழுவிவரங்களை அனுப்பலாம். இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய www.omcmanpower.com என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்