சென்னை மாநகராட்சி கட்டிடங்களில் விளம்பரம் அமைக்க இடங்கள் ஆய்வு

சென்னை மாநகராட்சி கட்டிடங்களில் விளம்பரம் அமைப்பதற்கான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

சென்னையில் மாநகராட்சிக்கு சொந்தமான பொதுக் கழிப்பிடங் களிலும், பேருந்து நிறுத்தங்களிலும் விளம்பரங்கள் அமைப்பதற்கு மாமன்றத்தில் ஏற்கெனவே தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஜனவரி மாதம் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.50 ஆக இருந்த விளம்பரங்களுக்கான வாடகையை ரூ.500 ஆக உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் மாநகராட்சிக் கட்டிடங்களில் எங்கெல்லாம் விளம் பரங்கள் வைக்கலாம் என்று ஆய்வு செய்யும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “சென்னையில் 900 பொது கழிப் பிடங்கள், 1,500 பேருந்து நிறுத்தங்கள், 400-க்கும் மேற்பட்ட பூங்காக்களில் விளம்பரங்கள் அமைக்க அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப் படுகிறது. விளம்பரங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்படுவதன் மூலம் வருமானம் கூடுவதால் அந்த இடங் களும் பராமரிக்கப்படும். எனவே விளம் பரங்கள் அமைப்பதற்கான இடங்கள் கண்டறியப்பட்ட பிறகு, விதிகளுக்கு உட்பட்டு வரும் நிறுவனங்களுக்கு இடங்கள் அளிக்கப்படும்”என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்