தென்மேற்கு பருவமழை சராசரியைவிட 7% குறைவு

By செய்திப்பிரிவு

இந்தியாவில் இதுவரை பெய் துள்ள தென்மேற்கு பருவமழை சராசரியை விட 7 சதவீதம் குறைவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 17-ம் தேதி வரை இந்தியாவில் 296.2 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்த காலத்தில் சராசரியாக 318.4 மி.மீ மழை பெய்யும். ஆனால், இந்த முறை 7 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.

கடலோர ஆந்திரம், கேன்ஜடிக் மேற்கு வங்கம், ஜம்மு காஷ்மீர் ஆகிய பிரிவுகளில் சராசரியை விட அதிகமாக மழை பெய்துள்ளது. கேரளம், மத்திய மகாராஷ்டிரம், ராயலசீமா உள்ளிட்ட 11 பிரிவு களில் மழை பற்றாக் குறையாக உள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கர்நாடகம், தெலங்கானா, ஒடிசா உள்ளிட்ட 22 பிரிவுகளில் சராசரி யாக மழை பெய்துள்ளது. வழக்கமாக பெய்யும் மழையை விட 19 சதவீதம் வரை அதிகமாகவோ குறை வாகவோ பெய்திருந்தால் அது சராசரி மழை அளவாக கணக்கிடப்படும்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 17-ம் தேதி வரை வழக்கமாக 80 மி.மீ. மழை பெய்யும். ஆனால் இந்த வருடம் 70.4 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 12 சதவீதம் மட்டுமே குறைவு என்பதால் தமிழகத்தில் சராசரியான மழை பெய்துள்ளதாகவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்