ரயில் இ-டிக்கெட் முன்பதிவின்போது ஓடிபி முறை: வங்கிகள் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் அமல்படுத்த ஐஆர்சிடிசி அறிவுறுத்தல்

ரயில் இ-டிக்கெட் முன்பதிவின் போது முறைகேடுகளைத் தடுக்க ஓடிபி (ஒரே முறை அளிக்கும் பாஸ்வேர்ட்) முறையை வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டுமென வங்கிகளுக்கு ஐஆர்சிடிசி அறிவுறுத்தியுள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய பெரும்பாலான மக்கள் இணையதளங்களை பயன்படுத்துகின்றனர். இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) இணையதளத்தில் நிமிடத்துக்கு 14 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் 54 சதவீத ரயில் டிக்கெட்டுகள் ஐஆர்சிடிசி வெப்சைட் வாயிலாக முன்பதிவு செய்யப்படுகின்றன.

இ-டிக்கெட் முன்பதிவின்போது எவ்வித முறைகேடும் நடக்காமல் இருக்க ஓடிபி (ஒரே முறை அளிக்கும் பாஸ்வேர்ட்) அளிக்கப்படுகிறது. டிக்கெட் முன்பதிவின்போது சரியான வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வங்கியில் இருந்து வாடிக்கையாளரின் செல்போனுக்கு ஒரேயொரு முறை பயன்படுத்தக்கூடிய எண் (பாஸ்வேர்ட்) குறுந்தகவல் மூலம் அனுப்பப்படும். அந்த எண்ணை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்யலாம். எனவே, ஓடிபி முறையை அமல்படுத்தாமல் இருக்கும் வங்கிகள் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டுமென ஐஆர்சிடிசி அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஐஆர்சிடிசி உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘‘இ-டிக்கெட் முன்பதிவின்போது முறைகேடுகளைத் தடுக்க அனைத்து வங்கிகளிலும் ஓடிபி (ஒரே முறை அளிக்கும் பாஸ்வேர்ட்) முறையை வழங்க வேண்டுமென பயணிகள் கோரிக் கைவிடுத்துள்ளனர். பயணிகள் இ-டிக்கெட் வசதியை பெறும் வகையில் மொத்தம் 50 வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 24 வங்கிகள் ஓடிபி முறையை செயல்படுத்துகின்றன. எஞ்சி யுள்ள 26 வங்கிகளும் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்ற னர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

14 secs ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்