பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதை சிறப்பிக்கும் வகையில் பாம்பன் ரயில் பாலத்தின் நூற்றாண்டு தொடக்க விழா கடந்த 2014 ஜனவரி 28-ம் தேதி பாம்பன் ரயில் நிலையம் அருகே நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அப்துல் கலாம் தெற்கு ரயில்வே நிர்வாகப் பொது மேலாளர் ராஜேஷ் மிஸ்ரா, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஏ.கே.ரஸ்தோகி ஆகியோர் முன்னிலையில் ரயில்வே அமைச்சகத்துக்கு சில கோரிக்கைகளை முன்வைத்தார்.
நூற்றாண்டு பாரம்பரியச் சின்னமான பாம்பன் பாலத்தை யுனெஸ்கோவின் நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும். ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு ‘பாம்பன் எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் ஒரு புதிய தினசரி ரயிலை இயக்க வேண்டும்.
ராமேசுவரத்தில் இருந்து செல்லும் ஒவ்வொரு ரயிலிலும் மீனவர்கள் மீன்களைக் கொண்டு செல்வதற்காக பிரத்யேக ஐஸ் பெட்டி வசதி செய்து தர வேண்டும். மேலும் ராமேசுவரம், பாம்பன் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
ரயில்வே அமைச்சகம் இனியாவது கலாமின் கோரிக்கைக்கு செவிசாய்த்து அவரது கனவுகளை நனவாக்க வேண்டும் என்பது ராமேசுவரம் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago