பல்கலைக்கழக மானியக் குழு மூலமாக பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்க பரிசீலனை: யுஜிசி துணைத் தலைவர் தகவல்

By செய்திப்பிரிவு

கல்வியை வியாபாரமாக்கக் கூடாது என்பதால், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரி யர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு மூலம் ஊதியம் வழங்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக, பல்கலைக்கழக மானியக் குழு துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக உதகையில் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

நாட்டில் கல்வித் தரம் உயர்ந்து வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.2 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்படுகிறது. 30 மாநிலங்களில், அவர்களுக்கு தேவையான பாடத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டி உள்ளதால், உயர்க் கல்வியில் சமச்சீர் பாடத் திட்டம் கொண்டுவர முடியாது. மாணவர்கள் தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நாட்டில் 30 சதவீத உயர்க் கல்வி அறிவு உள்ள நிலையில், தமிழகத்தில் 43 சதவீதமாக உள்ளது.

அடுத்த 15 ஆண்டுகளில் கல்வி யில் முன்னோடியாக இந்தியா திகழும். கல்வியை வியாபார மாக்கக் கூடாது என்பதால், நாடு முழு வதிலும் உள்ள கல்லூரி பேரா சிரியர்களுக்கு, பல்கலைக்கழக மானியக் குழு மூலமாக ஊதியம் வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. போலிச் சான்றிதழ் பிரச்சினை குறித்து காவல்துறை மூலமே நடவடிக்கை எடுக்க முடியும். அரசியல்வாதிகள் போலிச் சான்றிதழ் சமர்பிப்பது குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த ஆண்டு, பல்கலைக்கழக மானியக் குழு மூலமாக பாரதி தாசன், காந்தி கிராமம் மற்றும் விவேகானந்தா பல்கலைக் கழகங்களுக்கு, கவுசல் திட்டத் தின் கீழ் தலா ரூ.5 கோடி வழங் கப்பட்டுள்ளது.

அவிநாசிலிங்கம் பல்கலைக் கழக பிரச்சினைக்கு தீர்வு காண ஒரு மாத காலம் அவகாசம் அளிக் கப்பட்டது. ஆனால், நிர்வாகம் சார்பில் மேலும் ஒரு மாதம் அவகாசம் கோரப்பட்டுள்ளது. அதற்குள், பல்கலைக்கழக மானியக் குழுவிடம் அவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட வேண்டும். தவறும்பட்சத்தில், அந்த பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப் பட்டுள்ள ரூ.110 கோடி நிதி நிறுத்தப்படும்.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து, விசாரணைக்குப் பின் நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரிகளில் மாணவர்கள் மீதான பாலியல் தொந்தரவு குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தொழிற் சாலைகள் அமைக்க முடியாது என்பதால், தோட்டக்கலை பல்கலை, உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் அமைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்