திருமணமான மாணவி கல்லூரியில் படிக்க தடையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு

திருமணமான மாணவி கல்லூரியில் படிப்பதை தடை செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரி பி.ஏ. ஆங்கிலம் இறுதி ஆண்டு மாணவி தவுலத். இவர், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஆசிரியரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தவுலத் 27.11.2014 முதல் 3.12.2014 வரை கல்லூரிக்கு செல்லவில்லை. பின்னர் கணவரின் வீட்டினர் திருமணத்தை ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து 4.12.2014-ல் தவுலத், தனது கணவர் மற்றும் மாமியாருடன் கல்லூரிக்கு சென்றார்.

திருமணமாகிவிட்டால் கல்லூரியில் அனுமதிக்க முடியாது எனக் கூறி அவர்களை முதல்வர் அனுப்பிவிட்டார். பின்னர், தவுலத்தின் மாமியார், கல்லூரி முதல்வருக்கு ஒரு கடிதம் அனுப்பி, பெண் ஒருவருக்கு கல்வி வழங்க மறுப்பது சரியல்ல என்று உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். அதன் பிறகும் தவுலத் கல்லூரியில் சேர்க்கப்படவில்லை.

இந்நிலையில், தன்னை கல்லூரி யில் சேர்க்கக்கோரி தவுலத் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அவர் மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததால், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதனை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஜி.சொக்கலிங்கம் விசாரித்து பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் மாணவியை அடுத்த கல்வி ஆண்டில் தேர்வு எழுத அனுமதிப்பதாகவும், அதை மாணவி ஏற்றுக்கொண்டதாகவும் கல்லூரி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அப்படி நடந்திருந்தால் மாணவியின் மாமியார் கல்லூரி முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கமாட்டார். மாணவி ஆட்சியரிடம் மனு அளித்திருக்கமாட்டார்.

திருமணமான மாணவி கல்லூரியில் படிப்பதற்கு தடையில்லை. கல்லூரி வழக்கறிஞரும், தங்களது கல்லூரியில் திருமணமான பெண்கள் படிப்பதாக தெரிவித்துள்ளார். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மனுதாரர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அவரை கல்லூரியில் அனுமதிக்க மறுப்பது சரியல்ல.

மனுதாரர் தவறு செய்ததாக கல்லூரி நிர்வாகம் கருதினால், அவருக்கு மன்னிப்பு வழங்கியிருக்க வேண்டும். மனுதாரர் நீதிமன்ற உத்தரவின்படி இறுதி பருவத்தேர்வை எழுதி முடித்துள்ளார். அவரது தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்