வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் மாடுகள் நுழைவதை தடுக்க சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் மாடுகள் உள்ளே நுழைவதை தடுக்க சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்றும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் உங்கள் குரலில் வாசகர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் உள்ள முக்கியமான பேருந்து நிலையங்களில் ஒன்றாக வில்லிவாக்கம் பேருந்து நிலையம் விளங்குகிறது. இங்கிருந்து பாரி முனை, பட்டினப்பாக்கம், திருவான் மியூர், வள்ளலார் நகர், அண்ணா சதுக்கம், வண்டலூர், பூந்தமல்லி, திருவேற்காடு உள்ளிட்ட பல இடங் களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகி ன்றன. இந்த பேருந்து நிலையத்தில் அடிப்படை தேவைகள் போதுமான அளவு இல்லாததால் மக்கள் அவதிப் படுகின்றனர்.

இது தொடர்பாக வாசகர் ஒருவர், ‘தி இந்து - உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு கூறியதாவது:

வில்லிவாக்கம் பேருந்து நிலை யத்தை தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த பேருந்து நிலையத்துக்குள் அடிக்கடி மாடுகள் புகுந்துவிடுகின் றன. அதன் கழிவுகள் பேருந்து நிலை யத்தில் ஆங்காங்கே கிடக்கிறது. இதனால், பயணிகள் அவதிப்படுகின்ற னர். எனவே, மாடுகள் உள்ளே நுழையாமல் இருக்கும் வகையில் பேருந்து நிலையத்தை சுற்றிலும் சுவர் அமைக்க வேண்டும். மேலும், குடிநீர், இருக்கை வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகளை யும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘வில்லி வாக்கம் பேருந்து நிலையத்தில் அடிப்படை தேவைகளை மேற்கொள்வது தொடர்பாக நிர்வாகத்தின் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லவுள்ளோம். இந்த பிரச்சினை விரைவில் தீரும் என நம்புகிறோம்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்