2-வது நாளில் 3,564 பேருக்கு பொறியியல் ஒதுக்கீட்டு ஆணை: இசிஇ-க்கு வரவேற்பு

By செய்திப்பிரிவு

பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வின் 2-வது நாளான நேற்று 4,621 மாணவ-மாணவிகள் அழைக் கப்பட்டனர். இதில் 3,564 மாணவ-மாணவிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.

கடந்த 2 நாள் நிலவரப்படி இ.சி.இ பிரிவையே அதிக மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுத்துள்ளனர். இதுவரை 968 பேர் இ.சி.இ பிரிவை தேர்ந்தெடுத்துள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் 821 பேர் மெக்கானிக்கல் பிரிவையும், 3-வது இடத்தில் 659 பேர் சி.எஸ்.இ பிரிவையும் தேர்ந்தெடுத்துள்ளனர்.

மாணவர்களை பொருத்தவரை முதல் விருப்பப் பாடமாக மெக்கானிக்கல் இருந்து வருகிறது. இதுவரை 807 மாணவர்கள் மெக்கானிக்கல் பிரிவை தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் மாணவி கள் மத்தியில் இ.சி.இ படிப்பே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இரண்டு நாட்களில் 641 மாணவிகள் இந்த பிரிவை தேர்ந்தெடுத்துள்ளனர்.

விறுவிறுப்பான சேர்க்கை

முதல் 2 நாட்களில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம், எம்.ஐ.டி, கோவை ஜி.சி.டி மற்றும் பி.எஸ்.ஜி கல்லூரிகள், மதுரை தியாகராஜா கல்லூரி ஆகிய கல்லூரிகளில் விறுவிறுப்பாக மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

இந்த கல்லூரிகளில் இ.சி.இ, மெக்கானிக்கல், சி.எஸ்.சி படிப்புகளில் பொது பிரிவில் தற்போது காலி யிடங்கள் இல்லை. மற்ற பிரிவினருக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே இடங்கள் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்