அதிமுக கவுன்சிலர் சரமாரி வெட்டிக் கொலை: ராஜபாளையத்தில் பட்டப்பகலில் நடந்தேறிய பயங்கரம்

By செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டம், ராஜபாளை யத்தில் பரபரப்பான சாலை யில் அதிமுக கவுன்சிலர் மர்ம நபர்களால் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

ராஜபாளையம் சூளை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பா.மீனாட்சிசுந்தரம் (40). ராஜபாளையம் 17-வது வார்டு அதிமுக கவுன்சிலர். தொடர்ந்து 3-வது முறையாக கவுன்சில ராக உள்ளார். எம்.ஜி.ஆர். இளை ஞரணி நகரச் செயலராகவும் பதவி வகித்து வந்தார். பேரிச்சம்பழம் மொத்த வியாபாரம் தவிர ரியல் எஸ்டேட், பணம் கொடுக்கல் வாங் கல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

வாக்குவாதம் முற்றியது

ராஜபாளையம் பஞ்சு மில் சாலையில் உள்ள தனது அலுவல கத்துக்கு வழக்கம்போல் செவ் வாய்க்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். வழியில் மாயூரநாதர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு கடைக்குச் சென்ற வரை மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் வழிமறித்துப் பேசியுள்ள னர். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியுள்ளது.

அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் 2 பேர் அரிவாளால் சரமாரியாக மீனாட்சிசுந்தரத்தை வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மர்மநபர்கள் இருவரில் ஒருவ ருக்கு கையில் அரிவாள் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. 3-வது நபர் மோட்டார் சைக்கிளை தயாராக வைத்திருந்ததால் கொலையாளி கள் உடனடியாக அதில் ஏறிதப்பி னர். இக்கொலை சம்பவத்தால் அப்பகுதியே பரபரப்பானது. பொது மக்கள் அலறியடித்து ஓடினர். வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தகவலறிந்த ராஜபாளையம் டி.எஸ்.பி. அசோகன், வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தின கரன் மற்றும் போலீஸார் வந்து சட லத்தைக் கைப்பற்றி பரிசோதனைக் காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

வாகன அடையாளம் தெரிந்தது

தகவலறிந்து வந்த எஸ்.பி. மகேஸ் வரன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். அப்போது, கொலையாளிகள் பயன்படுத்திய இருசக்கர வாகன எண் டி.என் 67 ஏ.கே.1977 என்பதும் இந்த பைக் படிக்காசுவைத்தான் பட்டியைச் சேர்ந்த ஒருவருக் குச் சொந்தமானது என்ப தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கட்டப் பஞ்சாயத்து விவகாரமா?

கொலையான மீனாட்சிசுந்தரம் கோவில்பட்டி அருகே உள்ள ஒரு இடத்தை ரூ.56 லட்சத்துக்கு அண்மையில் பேசி முடித்துள்ளார். இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சிலருடன் முன்விரோதம் ஏற்பட்டது. மேலும் கொடுக்கல் வாங்கல், கட்டப் பஞ்சாயத்து விவ காரம் தொடர்பாக விடுதலைச் சிறுத் தைகள் கட்சியைச் சேர்ந்த சிலருடனும் விரோதம் இருந்து விசாரணையில் தெரியவந்துள் ளது.

கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன. இதனிடையே இவ்வழக்கு தொடர்பாக சீனி, சிவா, ரமேஷ், நாதன் ஆகியோரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் தாமஸ் என்பவரை தேடி வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித் தன. கொலையான மீனாட்சிசுந்த ரத்துக்கு மனைவி மகன் மகள் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்