சென்னை புறநகர் பகுதிகளில் ஹெல்மெட் விற்பனை மந்தம்

By செய்திப்பிரிவு

ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், சென்னைக்குள் ஹெல்மெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது வருகிறது. அதே சமயம், புறநகர் பகுதிகளில் ஹெல்மெட் விற்பனை மந்தமாக உள்ளது.

இதுகுறித்து, வில்லி வாக்கத்தில் ஹெல்மெட் கடை வைத்துள்ள சாதிக் அலி கூறுகை யில், ‘‘ஹெல்மெட் அணிவது கட்டாயம் என அரசு உத்தரவு பிறப்பித்த உடன் நாங்கள் ஹெல் மெட் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை நடைபெறவில்லை. இதற்குக் காரணம், போலி ஐ.எஸ்.ஐ., பிராண்டுகள் மிகக் குறைந்த விலைக்கு விற்பதால் எங்களு டைய பிராண்டட் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இதே கருத்தை ஆமோதிக்கின்ற வகையில் பேசினார் ஆவடியில் ஹெல்மெட் கடை வைத்துள்ள மூர்த்தி. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘அரசு விதித்துள்ள உத்தரவை ஒருசில நாட்களுக்குத்தான் காவல்துறையினர் தீவிரமாக கடைப்பிடிப்பார்கள் என பொதுமக்கள் கருதுகின்றனர். அதன்பிறகு வழக்கம்போல ஹெல்மெட் அணியாமல் செல்லலாம் என நினைக்கின்றனர்.

எனவே, ஒருசில நாட்களுக்காக எதற்காக 500 முதல் ஆயிரம் ரூபாய் வர செலவழிக்க வேண்டும் என கருதுகின்றனர். அத்துடன், புறநகர் பகுதிகளில் குறைந்த அளவே போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபடுவதால் ஹெல்மெட் அணியாமல் செல்லும் அனைவரையும் பிடிப்பது என்பது சிரமமான காரியம். இதன் காரணமாகவும் ஹெல்மெட் விற்பனை மந்தமாக உள்ளது’’ என்றார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

43 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்