ஆன்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேஷன் வடிவமைப்பு, உருவாக்கம் தொடர்பான சர்வதேச பயிலரங்கம்: வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது

By செய்திப்பிரிவு

ஆன்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேஷன்கள் வடிவமைப்பு, உருவாக்கம் தொடர்பான சர்வதேச பயிலரங்கம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில் நடத்தப்பட்டது.

அமெரிக்காவின் டல்லாஸ் பகுதியில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஜான் கோல் இந்த பயிலரங்கத்தை நடத்தினார். மாணவர்கள் ஆன்ட்ராய்ட் இயங்கு தளத்தில் பல்வேறு அப்ளிகேஷன்களை உருவாக்க இந்த பயலரங்கம் உதவியாக இருந்தது.

அதேபோல ரசனையுடன் கூடிய கணினி புரோக்ராம் குறித்து டெக்சாஸ் பல்கலைக்கழக கணினி அறிவியல் கல்வி மைய இயக்குநர் ஜெயகேசவன் விளக்கினார்.

ஆராய்ச்சி மாணவர்கள், பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் இதில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியை வேல்ஸ் பல்கலைக்கழக துணை வேந்தர் வி.தமிழ் அரசன் தொடங்கிவைத்தார். ஆராய்ச்சி ஆலோசகர் எஸ்.சிவசுப்ரமணியன் வாழ்த்திப் பேசினார். வேந்தர் ஐசரி கே.கணேஷ் நிறைவு உரையாற்றினார். அப்போது அவர், எதிர்காலத்திலும் டெக்சாஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இதுபோன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த விரும்புவதாக தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்