காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு நிதியுதவி

By செய்திப்பிரிவு

விருதுநகரில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலார் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், மகாராஜபுரம் கிராமம், தாணிப்பாறை அடிவார மலைப் பகுதியில் 17.5.2015 அன்று பெய்த பலத்த மழையின் காரணமாக திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பைச் சேர்ந்த பொன்ராஜ், பாஸ்கரன், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த உதயா கணேசன், தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டம், புதியம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த அனந்தப்பன், ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த செல்லச்சாமி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த சரவணக்குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டம், புதியம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முப்பிடாதி ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து துயரம் அடைந்தேன்.

காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்