ஆன்-லைன் மூலம் குறைந்த கட்டணத்தில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க பொது சேவை மையம்: சென்னை மண்டல அலுவலகத்தில் தொடக்கம்

By ப.முரளிதரன்

குறைந்த கட்டணத்தில் பாஸ் போர்ட் பெற விரும்புபவர்கள் ‘ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்க சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் ‘பொது சேவை மையம்’ தொடங்கப் பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் மற்றும் சுற்றுலா என பல்வேறு தேவைகளுக்காக இந்தியாவில் இருந்து ஏராள மானவர்கள் வெளிநாடு செல் கின்றர். குறிப்பாக, தமிழகத்தில் இருந்து வெளிநாடு செல்பவர் களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் இயங்குகின்றன.

சென்னையில் அமைந்தகரை, சாலிகிராமம் மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் உள்ளன. பாஸ்போர்ட் பெற விரும்புபவர் கள் முதலில் ‘ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பித்து பின்னர் இங்கு சென்று நேர்காணலில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு ‘ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்கும் முறை சிலருக்கு சரியாகத் தெரிவதில்லை.

இதைத் தங்களுக்கு சாதக மாக பயன்படுத்திக்கொள்ளும் சில இன்டர்நெட் மையங்கள், ரூ.300 முதல் ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். இந்நிலையில், பொதுமக்களுக்கு இச்சேவையைக் குறைந்த கட்டணத்தில் அளிப்பதற்காக சென்னை அண்ணாசாலையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் பொது சேவை மையம் தொடங்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து, மண்டல பாஸ் போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

புதிதாக பாஸ்போர்ட் பெற நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர் களின் எண்ணிக்கை நாளொன் றுக்கு 2 ஆயிரத்து 100-ல் இருந்து 2 ஆயிரத்து 550 ஆக அதிகரிக் கப்பட்டுள்ளது. மேலும், நேர் முகத் தேர்வுக்கான முன் அனுமதி பெறுவதற்கான கால அவகாசம் 20 நாட்களில் இருந்து 4 நாட்களாக குறைக்கப் பட்டுள்ளது.

தற்போது பொதுமக்களின் வசதிக்காக பாஸ்போர்ட் தலைமை அலுவலகத்தில் பொது சேவை மையம் தொடங் கப்பட்டுள்ளது. இதில், பாஸ் போர்ட் பெற ‘ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிப்பதற்கான உதவிகள் செய்து தரப்படும். இதற்காக தமிழக அரசு கேபிள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் ஊழியர்கள் இருவர் இப்பணிக்காக நியமிக்கப் பட்டுள்ளனர். பொதுமக்கள் இந்த சேவை மையத்துக்கு வந்து நேர்காணலில் பங்கேற்பதற்கான முன் அனுமதியை பெறலாம்.

இச்சேவையை பெற குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதன்படி, கடன் அட்டை (கிரெடிட் கார்டு) மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு ரூ.100-ம், பணமாக செலுத்து பவர்களுக்கு ரூ.155-ம் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. பாஸ்போர்ட் பெற விரும்பும் பொதுமக்கள் இக் குறைந்த கட்டண சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு பாலமுருகன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE