பி.எஸ்சி. நர்ஸிங், பி.பார்ம் உள்ளிட்ட 9 பட்டப்படிப்புகளுக்கு இன்றுமுதல் விண்ணப்பங்கள் விநியோகம்: 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பெற்றுக் கொள்ளலாம்

பி.எஸ்சி. நர்ஸிங், பி.பார்ம் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த 9 பட்டப் படிப்புகளுக்கு 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளான பி.எஸ்சி. (நர்ஸிங்), பி.பார்ம்., பி.பி.டி., பி.ஏ.எஸ்.எல்.பி. (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல்), பி.எஸ்சி. ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பி.எஸ்சி. ரேடியோ தெரபி டெக்னாலஜி, பி.எஸ்சி. கார்டியோ பல்மோனரி பெர்பியூசன் டெக்னாலஜி, பி.எஸ்சி. ஆப்டோமேட்ரி, பி.ஓ.டி. ஆகிய படிப்புகள் உள்ளன.

இந்த பட்டப் படிப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங் கள் இன்று முதல் விநியோகிக்கப் படுகிறது.

இந்த விண்ணப்பங்கள் 17-ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வரும் 18-ம் தேதி மாலை 5 மணிக்குள் ‘செயலாளர், தேர்வுக் குழு, எண்.162, ஈ.வே.ரா.பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600010’ என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

விண்ணப்பத்தை நேரில் பெறு பவர்கள், அந்தந்த மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு விண்ணப்ப மனுவுடன் சென்னையில் பண மாக மாற்றத்தக்க வகையில் ரூ.350-க்கான கேட்பு வரை வோலையை (டிடி) இணைத்து கொடுத்து விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.

தேசிய மயமாக்கப்பட்ட ஏதாவது ஒரு வங்கியில் ‘செயலா ளர், தேர்வுக் குழு’ என்ற பெயரில் வரைவோலை எடுக் கப்பட வேண்டும். தாழ்த்தப்பட் டோர் (அருந்ததியர்) மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்த மாணவர்கள் சாதி சான்றிதழின் 2 நகல்களை சமர்ப்பித்து விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ள லாம்.

விண்ணப்ப படிவங்கள் மற்றும் தகவல் தொகுப்பு ஏட்டை www.tnhealth.org மற்றும் www.tn.gov.in என்ற இணையதளத்தில் wஇருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கேட்பு வரைவோலையை இணைத்து அனுப்ப வேண்டும்.

தாழ்த்தப்பட்டோர் (அருந் ததியர்) மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் கேட்பு வரைவோலை இணைக்கத் தேவையில்லை. பிளஸ் 2 வகுப்பில் தொழில் கல்வி பாடப்பிரிவில் (Vocational Stream) படித்த மாணவர்கள் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாது. கடந்த ஆண்டு 8 மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள் இருந்தன.

இந்த ஆண்டு பி.எஸ்சி.ஆப்டோமேட்ரி பட்டப்படிப்பு புதிதாக வந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்