அதானி குழுமத்துடன் விரைவில் ஒப்பந்தம்: முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடக்கிறது

ராமநாதபுரத்தில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் அதானி குழுமம்- தமிழக அரசு இடையிலான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகிறது.

தமிழக அரசின் சார்பில் கடந்த 2012-ம் ஆண்டு ‘சூரியமின்சக்தி கொள்கை -2012’ஐ முதல்வர் ஜெயலலிதா அறிமுகப் படுத்தினார்.

இந்த கொள்கை படி ஆண்டுக்கு 1000 மெகாவாட் மின்சாரம் சூரிய மின்சக்தி மூலம் பெறுவது இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பிரதமர் மோடியின் நண்பர் கவுதம் அதானியின் நிறுவனமான அதானி குழுமம், ராமநாதபுரம் மாவட்டம், கமுதியி்ல் 5000 ஏக்கர் பரப்பில் மின் உற்பத்தி மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.

இந்த நிறுவனம், ஒரு மெகாவாட்டுக்கு ரூ.7 கோடி வீதம் 200 மெகாவாட்டுக்கு ரூ.1400 கோடியை முதலீடு செய்கிறது. மேலும், தொடர்ந்து 1000 மெகாவாட் வரை உற்பத்தி திறனை மேம்படுத்தவும் திட்டமிட்டுள் ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் விரைவில் கையெழுத்தாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்