சென்னை: கட்டாய ஹெல்மெட் உத்தரவை மீறிய காவலர்கள்

By செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் இன்று (ஜூலை 1) முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு இன்று காலை முதல் அமலுக்கு வந்துவிட்டது.

ஆனால், தலைநகர் சென்னையில் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய காவல்துறையினரில் மிகச் சிலர் ஹெல்மெட் அணியாமல் அதை வண்டியில் வைத்துக் கொண்டு உலா வந்தனர்.

அதேவேளையில், பெரும்பாலான காவலர்கள் வழக்கம்போல் ஹெல்மெட் அணிந்து சரியான முன்னுதாரணமாகத் திகழ்வதையும் காண முடிந்தது.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் ஹெல்மட்டை தலையில் அணியாமல் வண்டியில் வைத்துக் கொண்டு ரோந்தில் ஈடுபட்ட பீட் ஆபீசர். | படம்: எல்.சீனிவாசன்

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டிய காவலர்களே காவலை மீறுவது நியாயமா? என்ற கேள்வி பொதுமக்கள் மனதில் எழாமல் இல்லை.

சோதனை:

இதற்கிடையில், இன்று காலை முதலே சென்னை நகரின் பிரதான பகுதிகள் போக்குவரத்து போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.புக், இன்சூரன்ஸ் போன்ற ஆவணங்கள் பறிமுதல் செய்வது, ஒரிஜினல் ஆவணங்கள் இல்லாதவர்களிடம் வாகனங்களை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

ஹெல்மெட் அணியாமல் வந்த நபரின் வாகன சாவியை பறிமுதல் செய்து நடவடிக்கையில் ஈடுபட்ட போலீஸார். இடம்: சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதி; படம்: எல்.சீனிவாசன்.

வாகனத்தில் பின்னால் அமர்ந்து வருபவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இதில் பள்ளி குழந்தைகள், வயதானவர்களுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்