திருவள்ளூர் மாவட்டத்தில் ஆதிதிரா விடர் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களின் உணவுக்காக அரசு ஊழியர் கூட்டுறவு பண்டக சாலையில் மளிகைப் பொருட்கள் வாங்கியதற்கான தொகை ரூ.4.30 லட்சம் பாக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்தொகையை செலுத்தாமல் தனியாரிடமிருந்து மளிகைப் பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதால் கூட்டுறவு பண்டக சாலைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆதி திராவிட மாணவ, மாணவியர்கள் தங்கிப் படிப்பதற்காக 40 விடுதிகள் உள்ளன.
இதில், 2 ஆயிரத்து 300 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். எனினும், மிகக் குறைந்த மாணவர்களே இந்த விடுதிகளில் தங்கிப் படிப்பதாக தெரிகிறது. ஆதிதிராவிடர் நல திட்டத்தின் கீழ் ஒரு மாணவரின் உணவுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.750 வீதம் நிதி ஒதுக்கப்படுகிறது.
ஆதிதிராவிட நலத்துறை சார்பில், விடுதி மாணவர்களின் உணவுத் தேவைக்கான மளிகைப் பொருட்கள், திருவள்ளூர் அரசு ஊழியர் கூட்டுறவு பண்டக சாலை யில்தான் வாங்கப்பட்டு வந்தன. கடந்த 2014-ம் ஆண்டில் வாங்கிய பொருட்களுக்காக ரூ.4.30 லட்சம் பாக்கி உள்ளது. இந்நிலையில், அரசு ஊழியர் கூட்டுறவு பண்டக சாலையில் இருந்து மளிகைப் பொருட்களை வாங்குவதை நிறுத்தி விட்டு தனியார் கடைகளில் மளிகைப் பொருட்களை ஆதி திராவிட நலத்துறை வாங்கி வருகிறது.
இதுகுறித்து, கூட்டுறவு பண்டக சாலை தரப்பில் ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட புகார் மனுவில், ‘நிலுவைத் தொகையின் வழங் காமல், முறையான அறிவிப்பும் இல்லாமல் தன்னிச்சையாக வெளிச் சந்தையில் மளிகைப் பொருட்கள் வாங்கப்படுகின்றன. இதனால் கூட்டுறவு பண்டக சாலையை கொள்முதல் செய்து வைத்துள்ள மளிகைப் பொருட்கள் சேதம் ஏற்படுவதோடு, வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
தனியார் கடைகளில் வாங்கப்படும் பொருட்களுக்கான தொகையை தனி வட்டாட்சியர்கள் மற்றும் கருவூல அதிகாரிகள் சட்டத்துக்கு விரோதமாய் அனுமதிக்கின்றனர். எனவே, கூட்டுறவு பண்டகசாலைக்கு வைக் கப்பட்டுள்ள ரூ.4.30 லட்சம் பாக்கியை உடனடியாக வழங்குவ தோடு, தனியார் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கும் தடை விதிக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தனர்.
இது தொடர்பாக, மாவட்ட கருவூல கணக்குத் துறை அலுவலர் திருவள்ளூர், திருத் தணி, அம்பத்தூர் மற்றும் பொன்னேரியில் உள்ள சார் கருவூல அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட கருவூல அதிகாரி மஞ்சுளாவிடம் கேட்ட போது, இந்த புகார் தொடர்பாக விளக்கம் கேட்டு திருவள்ளூர், திருத்தணி, அம்பத்தூர் மற்றும் பொன்னேரி சார் கருவூலத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப் படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago