பிரிட்டிஷ் கவுன்சிலில் ஆங்கிலம் பயிற்சி

By செய்திப்பிரிவு

பிரிட்டிஷ் கவுன்சிலின் ஆங்கில மொழி மையம், ஆங்கிலக் கல்வித் தேவைகளுக்கேற்ற பயிற்சிகளை வழங்கி வருகிறது.

ஆங்கிலப் பயிற்சிகள் தெளிவான பயிற்சி இலக்குகள், பேச்சு மற்றும் கவனித்தல், பயில்வோரின் கருத்தறிதல் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. நம்பிக்கையுடன் மொழியை கையாளும் விதத்தில் பயிற்சியின் முடிவில் ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. பொது ஆங்கிலம், ஆங்கில உரையாடல், வணிக ஆங்கிலம், ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வுக்கு தயாராதல், பி.ஈ.சி. தேர்வுக்கு தயாராதல், ஆசிரியர் பயிற்சி என்று உன்னதமான ஆங்கிலப் பயிற்சிகளை 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு பிரிட்டிஷ் கவுன்சில் அளிக்கிறது.

பயில்வோருக்கு திறனறியும் தேர்வு நடத்தி, அவர்கள் ஏற்கெனவே பெற்றுள்ள ஆங்கிலத் திறனை மதிப்பீடு செய்து, அதன் அடிப்படையில் தேவையான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பெயர் பதிவு மற்றும் பயிற்சி வார நாட்கள் ஒதுக்கப்படும்.

ஆங்கிலப் பயிற்சிக்கான பெயர் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. பயிற்சி காலம் ஜூலை 14 முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை. பல்வேறு வார நாட்கள், வார இறுதி நாட்களில் பயில வாய்ப்புகள் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி பிரிட்டிஷ் கவுன்சில், 737, அண்ணா சாலை, சென்னை-600002. மேலும் 1800 102 4353 என்ற தொலைபேசி எண்ணிலோ, jayashree.natarajan@in.britishcouncil.org என்ற மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்