இளவரசன் 2-ம் ஆண்டு நினைவு தினம்: தருமபுரியில் போலீஸ் குவிப்பு - தடையை மீறிய வி.சி. கட்சியினர் கைது

தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் அடுத்த நத்தம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் இளவரசன். காதல் கலப்புத் திருமணம் செய்துகொண்ட இவர், மனைவி பிரிந்து சென்ற நிலையில் கடந்த 2013 ஜூலை 4-ம் தேதி ரயில் பாதையில் மர்மமாக இறந்து கிடந்தார். இந்த சம்பவத்தின்போது வீடுகள் சூறை, தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தன.

நேற்று இளவரசனின் 2-ம் ஆண்டு நினைவு தினம் என்பதால், நினை வஞ்சலி செலுத்த மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மாவட்ட நிர்வாகம் நேரம் ஒதுக்கீடு செய்திருந்தது. அந்த நேரத்தில் இளவரசனின் குடும்பத் தார், மற்றும் உறவினர்கள் நினைவி டத்தில் அஞ்சலி செலுத்தினர்.

நினைவு தினத்தின்போது சட்டம்-ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படக் கூடாது எனக் கூறி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டம் முழுக்க 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் சுமார் 1,000 போலீ ஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

35 பேர் கைது

இளவரசன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த விடுதலை சிறுத் தைகள் கட்சி சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. காவல்துறை அனுமதி மறுத்ததால் தடையை மீறி கிராமத்துக்குள் செல்ல அக்கட்சியினர் திட்டமிட்டனர்.

திருமாவளவனின் தனிச் செய லாளர் தமிழ்ச்செல்வன், வி.சி. கட்சி மாநில செய்தி தொடர்பாளர் வன்னிஅரசு ஆகியோர் தலைமை யில் 35 பேர் அரசு மருத்துவமனை அருகிலுள்ள அம்பேத்கர் சிலை பகுதியில் இருந்து புறப்பட்டனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்