ஹெல்மெட்டுகளின் தரத்தை பரிசோதிக்க தமிழகத்தில் உரிய வசதிகள் இல்லை

By அ.சாதிக் பாட்சா

தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. ஒன்றரை கோடி இருசக்கர வாகனங்கள் உள்ள தமிழகத்தில், ஹெல்மெட்டின் தரத்தை பரிசோதிக்க ஒரு சோத னைக்கூடம்கூட இல்லை என்பது கசப்பான உண்மை.

தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாய மாகியுள்ளது. தரமான ஹெல் மெட்கள் போதிய அளவு உற்பத்தி இல்லாததால் ஐஎஸ்ஐ முத்தி ரையில்லாத, தரமற்ற ஹெல் மெட்கள் விற்பனை அமோகமாக நடக்கிறது. மக்களும் கெடுபிடிக்கு பயந்து தரமற்ற ஹெல்மெட்களை வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

நாடு முழுவதும் மத்திய அரசின் சிறு குறு நடுத்தர தொழில்கள் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பரிசோதனை மையங்களில், ஐஎஸ்ஐ தரக் குறியீடு உள்ள பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்யும் வசதி உள்ளது. இங்கு பொருட்களை பரிசோதித்து வழங்கப்படும் தரச்சான்று அறிக்கை அடிப்படையில், இந்திய தர நிர்ணய அமைப்பு (பிஐஎஸ்) தரமற்ற பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்.

சென்னை கிண்டியில் உள்ள மண்டல பரிசோதனை மையத்தில் பல்வேறு பொருட்களின் தரம் குறித்து ஆய்வுகள் செய் யப்படுகின்றன. ஆனால் இங்கு ஹெல்மெட்களின் தரத்தை பரி சோதிக்கும் வசதி இல்லை என்பது வேதனையான விஷயம்.

இதுகுறித்து மண்டல பரிசோதனை மையத்தின் கூடுதல் தொழிலக ஆலோசகர் ஜி.சண்முக நாதன் ‘தி இந்து’விடம் கூறிய தாவது:

சிமென்ட், பேக்கேஜ் செய்யப் பட்ட குடிநீர், டிஎம்டி கம்பிகள் போன்ற பொருட்களுக்கு கட்டாயம் தரக்குறியீடு பெற வேண்டும். சில பொருட்களுக்கு, உற்பத்தியாளர் விரும்பினால் பிஐஎஸ்ஸிடம் விண்ணப்பித்து தரக்குறியீடு பெற்றுக்கொள்ளலாம். இந்திய தர நிர்ணய அமைப்பு (பிஐஎஸ்) ஆயிரக்கணக்கான பொருட்களுக்கு ஐஎஸ்ஐ தரக்குறியீடு வழங்கியுள்ளது.

ஹெல்மெட்டுக்கு தரக்குறியீடு கட்டாயமா என்பது தெரியவில்லை. தவிர, சென்னையில் உள்ள மண்டல பரிசோதனை மையத்தில் ஹெல்மெட்களின் தரத்தை பரிசோதிக்கும் வசதி இல்லை. இப்போதுதான் அதற்கான தேவை ஏற்பட்டுள்ளது. ஹெல் மெட்டை பரிசோதிக்கும் வசதிக் கான முன்னேற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன. எங்கள் சோத னைக்கூட வசதிகள் குறித்து பிஐஎஸ் அமைப்புக்கு தெரிவித்து ஹெல்மெட்களின் தரத்தை பரி சோதிக்கும் அனுமதியை விரைவில் பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

தரக்குறியீடு பெறும் முறை

பொருட்களில் ஐஎஸ்ஐ முத்திரை பெறுவது எப்படி? உதாரணத்துக்கு, ஹெல் மெட்டுக்கு ஐஎஸ்ஐ முத்திரை பெற வேண்டுமானால், அதை தயாரிக்கும் நிறுவனம் முதலில் பிஐஎஸ் அமைப்பிடம் விண்ணப் பிக்க வேண்டும். பிஐஎஸ் அதி காரிகள் அந்த தொழிற்சாலையை ஆய்வு செய்து உற்பத்திக்கு அனுமதி வழங்குவார்கள். பிறகு, உற்பத்தி செய்யப்பட்டதும் விற்பனைக்கு அனுப்பும் முன்பு அதன் மாதிரிகளை பிஐஎஸ் நிறு வனத்துக்கு அனுப்பவேண்டும். நாட்டின் பல்வேறு பரிசோதனை மையங்களுக்கு இவற்றை அனுப்பி சோதித்து திருப்திகரமான முடிவு பெற்ற பிறகு, ‘ஐஎஸ்ஐ’ தரக்குறியீட்டுடன் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்படும்.

‘ஐஎஸ்ஐ’ முத்திரையுடன் சந்தையில் விற்கப்படும் பொருட் களும் அவ்வப்போது பரிசோதிக் கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்