பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு பி.யு.சின்னப்பா குறித்து ஆவணப்படம்: திருச்சி தமிழ் ஆசிரியரின் தயாரிப்பு

By மு.முருகேஷ்

தமிழ்த் திரையுலகின் கலைச் சிகர மாய் திகழ்ந்த பி.யு.சின்னப்பாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது வாழ்க்கையை அரசுப் பள்ளி தமிழ் ஆசிரியர் ஆவணப்படமாக எடுத்திருக்கிறார்.

கவிஞர், சிறுகதை எழுத்தாளர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர், கிராமியக் கதைசொல்லி, யோகா சனப் பயிற்சியாளர் என பல பரிமாணம் கொண்டவர் தமிழ் ஆசிரியர் முனைவர் மா.தாமோதர கண்ணன் (39). திருச்சி திருவெறும் பூர் அடுத்த அரசங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற் றுகிறார். இவர் ஆவணப்பட இயக்கு நராகவும் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டுள்ளார். இது பற்றி ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:

‘‘என் தாத்தா முறை உறவான கவிஞர் திருச்சி பாரதனின் கவிதை களை சிறு வயதிலேயே படித் ததால் எனக்கும் கவிதை எழுதும் ஆசை வந்தது. திருச்சி ஜெயின்ட் ஜோசப் கல்லூரியில் படிக்கும் போது கதைகள் எழுதினேன். நண்பர்களோடு இணைந்து ‘விடியல்’ என்ற கையெழுத்து இதழை நடத்தினேன். திருச்சி வானொலியில் எனது பல கதை, கவிதை, கட்டுரைகள் ஒலிபரப்பாகி யுள்ளன.

என் முதல் சிறுகதை நூல் ‘வாஞ்சி மணியாச்சி’ 2005-ல் வெளி யானது. அதில் உள்ள சில கதை கள் அழ.வள்ளியப்பா இலக்கிய அறக்கட்டளை சிறுவர் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவை. ‘ஆங்கிலப் பழமொழிகளுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகள்’ (2011), ‘மின்னல்’ என்ற ஹைக்கூ கவிதை நூல் (2014) ஆகியவற்றையும் வெளியிட்டேன்.

ஊடகத் துறையிலும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற் பட்டது. சிறுவர் இலக்கியத்தில் முன்னோடியான, 80 வயதைக் கடந்த எழுத்தாளர் பி.வெங்கட் ராமனின் வாழ்க்கையை ‘பன்முகப் பார்வையில் பி.வெங்கட்ராமன்’ எனும் அரை மணிநேர ஆவணப் படமாக எடுத்தேன்.

கணிதமேதை ராமானு ஜனை பலரும் அறிய அடை யாளப்படுத்திய ஓவியரும் எழுத்தாளருமான பூரம் சத்திய மூர்த்தியின் வாழ்க்கையையும் ஆவணப்படமாக எடுத்தேன்.

தமிழ்த் திரையுலகின் முதல் ‘ஆக்‌ஷன் ஹீரோ’வாக விளங்கிய பி.யு.சின்னப்பாவின் பிறந்தநாள் நூற்றாண்டு கொண்டாடப்படும் நிலையில், அவரது வாழ்க்கையை ஆவணமாகத் தொகுக்க ஆசைப்பட்டேன். இந்த முயற்சிக்கு உந்துசக்தியாக எழுத்தாளர் பி.வெங்கட்ராமன் இருந்தார்.

6 மாதங்கள் தேடி அலைந்து, பி.யு.சின்னப்பா பற்றி ஏராளமான தகவல்களை சேகரித்தேன். 5 வயதில் நாடகத் துறையில் நுழைந்து, 19 வயதில் திரையுலகில் தடம் பதித்து, 35 வயதில் மறைந்துவிட்டார். தேர்ந்த வசன உச்சரிப்பு, அற்புதமாய் பாடும் திறன், அனைவரையும் ஈர்க்கும் சிருங்கார ரச நடிப்பால் ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர். அவரைப் பற்றி தொகுத்தவற்றை, உரையாடல் அமைத்து, ஒளிப்பதிவு செய்து, நானே இயக்கியுள்ளேன். 1 மணிநேரம் ஓடக்கூடிய இந்த ஆவணப்படம் இன்றைய தலை முறையினருக்கு பி.யு.சின்னப் பாவை சரியாக அறிமுகம் செய்து வைக்கும்.

இத்தனை சிறப்புகள் கொண்ட பி.யு.சின்னப்பாவின் நினைவிடம் புதுக்கோட்டையில் பராமரிப்பின்றி புல்மண்டிக் கிடக்கிறது. அவர் வாழ்ந்த வீடு, நினைவிடத்தை அரசு முறையாக பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு அந்த ஆவணப் படத்தை நிறைவு செய்துள்ளேன்.’’

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 secs ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்