ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மற்றும் அரியமான் கடற்கரைப் பகுதியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சர்வதேச நீர்விளையாட்டுப் போட்டிகள் சனி மன்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதனையொட்டி குந்துகாலில் சர்வதேச நீர்விளையாட்டுப் போட்டிகளை விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
கடலோர காவற்படை கூடுதல் இயக்குநர் சி.சைலேந்திரபாபு, மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார், மன்னார் வளைகுடா உயிர்கோளக் காப்பாளர் தீபக் எஸ். பில்கி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ். சுந்தர்ராஜ் பேசியதாவது,
தமிழ்நாட்டில் 1000 கி.மீ நீளத்திற்கு கடற்கரை அமைந்துள்ளது. அதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 237 கி.மீ அளவிற்கு கடற்கரை அமைந்துள்ளது. கடற்கரை பகுதி சுத்தமாக வைத்திருத்தல், கடல்வளம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மீனவர்கள் விளையாட்டுத் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த சர்வதேச நீர்விளையாட்டுப் போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டி நடைபெறும் குந்துகால் பகுதியானது சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவிற்கு சென்று திரும்பி இந்தியாவிற்கு வந்து இறங்கிய இடமாகும். அவரை மன்னர் சேதுபதி இங்கு தான் வரவேற்று சிறப்படைந்த இடமாக உள்ளது.
இலங்கை வீரர்கள்
இந்த போட்டியில் நீர் விளையாட்டுகளான கயாக் போட்டி, ஸ்டாண்டப் பெடல் படகுப்போட்டி, கைட் சர்பிங், விண்ட் சர்பிங் ஆகிய போட்டிகளும், அரியமான் கடற்கரைப் பகுதியில் கடற்கரை கால்பந்து, கடற்கரை கைப்பந்து, கடல்நீச்சல் போட்டிகளும் நடைபெறுகின்றன. இதில் இந்தியா, இலங்கை, அமெரிக்கா, பிரான்ஸ், பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர், என்றார் அமைச்சர் எஸ். சுந்தர்ராஜ்
போராட்டம் அறிவிப்பு
பாம்பனில் நடைபெறும் சர்வதேச நீர் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையில் இருந்தும் வீரர்கள் கலந்து கொண்டதால் அவர்களை உடனே நாடு திரும்ப வலியுறுத்தி தமிழ்தேசிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததுடன் மேலும் இதனைக் பாம்பனில் போராட்டங்கள் நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago