அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் போதிய பராமரிப்பு இன்றி இயக்கப்படுவதால் பயணிகள் பரிதவிக்கின்றனர்.
தமிழகத்தில் மட்டும் 22,501 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் நகரங்கள், மாவட்டப் பகுதிகளில் இயக்கப்படும் 9,164 அரசு டவுன் பேருந்துகளும் அடங்கும். இப்பேருந்துகள் மூலம் தினமும் சுமார் 2 கோடி மக்கள் பயணம் செய்கின்றனர்.
தமிழக அரசு போக்குவரத்துத் துறையின் கீழ் 8 அரசு போக்கு வரத்துக் கழகங்கள் இயங்கி வரு கின்றன. இதில் மதுரை கோட்டத்தி லிருந்து மட்டும் 2230 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆனால் பல அரசு பேருந்து களின் நிலை கவலைக்கிடமாகவே காட்சி அளிக்கின்றன. மழை பெய் தால் பயணிகள் நனைந்து கொண்டே பயணிப்பதும், பேருந்து பழுதானால் பாதி வழியில் இறக்கி விடுவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.
செங்கோட்டையில் இருந்து ராஜபாளையம், திருவில்லி புத்தூர், விருதுநகர் வழியாக மதுரை செல்லும் அரசு பேருந்து ஒன்று நேற்று பிற்பகல் விருது நகர் வந்தது. மாவட்ட ஆட்சிய ரகம், புதிய பேருந்து நிலையம், கருமாரி மண்டபம் வழியாக ஆத்துப்பாலம் பேருந்து நிறுத்தம் வந்தது. அனைத்து நிறுத்தங்களி லும் பயணிகள் பேருந்தில் ஏற முயன்றபோது அதிர்ச்சியடைந்த னர். காரணம், பின்பக்க படிக்கட்டு உடைந்து தொங்கியவாறு இருந்தது. படியின் குறுக்கே ஒரு கயிறும் கட்டப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் சிலர் பேருந்தின் முன்பக்கப் படிக்கட்டு வழியாக ஏறினர். பலர் பேருந்தில் ஏறவே பயந்து ஒதுங்கிக்கொண்டனர்.
மேலும், பல அரசு பேருந்துகளில் படிக்கட்டுகள், ஜன்னல் கம்பிகள், இருக்கைகள், மேற்கூரைகள் மட்டுமின்றி நடை பலகைகள்கூட பழுதான நிலையில் காணப்படுகின்றன. இதனால் அரசு பேருந்துகளில் அன்றாடம் பயணம் செய்யும் பயணிகள் பரிதவிக்கின்றனர்.
இது குறித்து போக்குவரத்துக் கழக தொழில்நுட்பப் பிரிவு பொறியாளர் ஒருவர் கூறியதாவது:
அரசு போக்குவரத்துக்கழ கத்தில் தற்போது பல பேருந்துகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. சில வகை இன்ஜின்களுக்கான உதிரி பாகங்கள் தற்போது கிடைப்பதில்லை. பழுதடைந்த உதிரி பாகங்கள் கிடைப்பதில்லை. அதேபோன்று தயாரிக்கப்படும் தரம் குறைந்த உதிரி பாகங்களே அதுவும் பற்றாக்குறையாகவே வழங்கப்படுகின்றன. தரம் குறைந்த உதிரி பாகங்களை இன்ஜினில் சேர்க்கும்போது அதன் செயல்திறனும் குறைந்து விடுகிறது என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago