10-ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் மறுகூட்டலுக்கு மே 26-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
10-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்களில் தேர்வு முடிவு நாள் அன்றே (இன்று) மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே, அவர்களின் தேர்வு முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்படாது. எனவே, தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்களில் மதிப்பெண் சான்றிதழ்களை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மறுகூட்டலுக்கு விண்ணப்பம்
எஸ்எஸ்எல்சி தேர்வெழுதிய மாணவர்கள் எந்தவொரு பாடத்துக்கும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மே 26 முதல் 31-ம் தேதி மாலை 5 மணி வரை தங்கள் பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
இரு தாள்கள் கொண்ட ஒவ்வொரு பாடத்துக்கும் (மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம்) கட்டணம் ரூ.305. ஒரு தாள் கொண்ட பாடங்களுக்கு (கணிதம், அறிவியல், சமூக அறிவியல்) கட்டணம் தலா ரூ.205. இந்த கட்டணத்தை மாணவர்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையங்களிலும் செலுத்த வேண்டும்.
இவ்வாறு தேவராஜன் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago