மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடல் நாளை (புதன்கிழமை) மதியம் 1 மணியளவில் ராமேஸ்வரம் கொண்டு வரப்படுகிறது. பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு வியாழக்கிழமை இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது.
அப்துல் கலாமின் உடலை அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் கொண்டு வர வேண்டும் என்ற உறவினர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.
அவ்வாறு கொண்டு வந்தால் எந்த இடத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைப்பது, எவ்விடத்தில் அடக்கம் செய்வது என்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் கே.நந்தகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எம்.மயில்வாகனன் ஆகியோர் இன்று மதியம் ராமேஸ்வரம் வந்தனர்.
தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய அவர்கள் பின்னர், பள்ளிவாசல் தெருவில் உள்ள கலாமின் வீட்டிற்கு வந்தனர். அங்கு கலாமின் உறவினர்களுடன் ஆலோசனை நடத்திய அவர்கள், நாளையும் நாளை மறுதினமும் நடைபெறும் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக அவசரமாக கிளம்பினர்.
இதுபற்றி ஆட்சியரிடம் கேட்டபோது, "புதன்கிழமை காலை 7 மணிக்கு அப்துல் கலாமின் உடல் டெல்லியில் இருந்து ராமேஸ்வரம் கொண்டுவரப்பட உள்ளது. மதியம் 1 மணிக்கு உடல் வந்து சேரும் என்று எதிர்பார்க்கிறோம். அஞ்சலி செலுத்துமிடம், அடக்கஸ்தலம் போன்றவை இன்னும் முடிவு செய்யப்படவில்லை" என்றார்.
அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த கலாமின் பேரன் சேக் சலீம் கூறியபோது, "அப்துல் கலாம் அவர்களின் உடலை ராமேஸ்வரம் கொண்டு வந்து, இறுதிச் சடங்குகளைச் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநில அரசின் ஒத்துழைப்புடன் அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் துரிதமாக செய்து வருகிறது. நாளை மதியம் 1 மணிக்கு அவரது உடல் ராமேஸ்வரம் வந்து சேரும்.
அதைத் தொடர்ந்து, பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படும். இரவு 7 அல்லது 8 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவார்கள். அதைத் தொடர்ந்து மறுநாள் (வியாழன்) காலை 10.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்" என்றார்.
பொதுமக்களின் அஞ்சலிக்கு உடல் வைக்கப்படும் இடம் மற்றும் அடக்கஸ்தலம் பற்றி இப்போது உறுதியாக சொல்லமுடியாது என்றும் கூறினார்.
ராமேஸ்வரத்தில் நெடுஞ்சாலையின் மீது அமைந்துள்ள பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்தான் உடல் வைக்கப்படும் என்று ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ராமேஸ்வரம் பள்ளிவாசல் அடக்கஸ்தலம், ராமேஸ்வரம் ஆபில் ஹாபில் தர்கா, பேருந்து நிலையம் அருகே உள்ள பொதுஇடம் ஆகியவற்றில் ஒன்று தேர்வு செய்யப்படும் என்று தெரிகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
23 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago