சென்னையில் மழை தொடரும்: ஜூன் மாதம் முதல் 144.7 மி.மீ மழை பதிவு

சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்து வரும் மழை மேலும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜூன் 5-ம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை இது வரை சென்னைக்கு சராசரி மழை பொழிவை தந்திருக்கிறது. இது வரை சென்னையில் சராசரியாக 144.7 மி.மீ மழை பெய்துள்ளது. ஜூன் மாத தொடக்கத்தில் ஓரளவு மழை பெய்து வந்தாலும், ஜூலை மாதத்தில் வெயில் உச்சத்தை அடைந்தது. 10 ஆண்டுகளில் காணாத வெயிலை சென்னை நகரம் கண்டது. ஆனால், ஜூலை இரண்டாவது வாரத்துக்கு மேல் சென்னையில் மழை பெய்ய ஆரம்பித்தது.

சென்னை நுங்கம்பாக்கம் சுற்றியுள்ள பகுதிகளைவிட மீனம்பாக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக மழை பெய்துள் ளது. ஜூன் 1-ம் தேதி முதல் பதிவான மழை நிலவரப்படி நுங்கம்பாக்கத்தில் சராசரியாக 163 மி.மீ மழையும் மீனம்பாக்கத்தில் சராசரியாக165 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக சென் னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. வெப்பச் சலனம் காரணமாக பெய்து வரும் மழை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE