சிதம்பரம் அருகே இயந்திரம் மூலமாக இலவச நெல் நடவுப்பணி: கடலூர் ஆட்சியர் தொடங்கி வைத்தார்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள நக்கரவந்தான்குடி கிராமத்தில் இயந்திரம் மூலமாக நெல் நடவு செய்யும் பணியை ஆட்சியர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

இதற்காக, ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விழாவில் வேளாண் இணை இயக்குநர் இளங்கோ, துணை இயக்குநர் ஹரிதாஸ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வசந்த், உதவி செயற்பொறியாளர் ராதா கிருஷ்ணன், உதவி இயக்குநர் ரமேஷ் மற்றும் நக்கரவந்தான்குடி விவசாயிகள் குலசேகரன், சந் தோஷம், ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இயந்திர நடவை தொடங்கி வைத்த பிறகு ஆட்சியர் சுரேஷ்குமார் கூறிய தாவது:

தமிழகத்தில் 2வது பசுமை புரட்சி ஏற்படுத்துவதற்காக காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்கப் படுத்த தொகுப்பு உதவி திட்டம் வேளாண் துறை மூலம் அறிமுகமாகிறது. இதனால், கடலூர் மாவட்டத்தில் 5000 ஹெக்டர் கூடுதலாக சாகுபடி நடைபெற்று ஒட்டுமொத்த உணவு தானிய உற்பத்தி 10 லட்சம் மெட்ரிக் டன்னாக மாறும் வாய்ப்பு உள்ளது.

இந்த திட்டத்தால் பரங்கிப்பேட்டை, மேல்புவனகிரி, கீரப்பாளையம், காட்டுமன்னார்கோவில் மற்றும் ஊராட்சி பகுதிகளில் குறுவை சாகுபடி பரப்பளவானது இவ் வாண்டு 39 ஆயிரம் ஏக்கர் வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி மகசூலை உயர்த்துவதற் காக நெல் நுண்ணூட்ட கலவை மற்றும் உயிர் உரங்கள் ஆகிய வற்றை பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.315 வீதம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக கடலூர் மாவட்டத்தில் ரூ.66.15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு இதுவரை 4149 பேரின் வங்கி கணக்கில் ரூ.66.14 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ரூ.26.49 லட்சம் அரசிடம் கோரப் பட்டுள்ளது.

டெல்டா பகுதியில் நிலத்தடி நீரை பயன்படுத்தி அதிக பரப் பளவில் நெல் சாகுபடி செய்து மகசூலை உயர்த்துவதற்காக பாய் நாற்றங்கால் மூலம் இயந்திரம் மூலம் நடவு செய்ய எவ்வித கட்டணமுமின்றி அரசே நடவு செய்யும். அதன்படி, தற்போது, பாய் நாற்றங்கால் நடவு இயந்திரம் மூலம் நெல் நடவு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. டெல்டா பகுதியில் 4350 ஏக்கர் நடவு பணியை வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்த ரூ.108.7 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை விவசாயிகள் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு ஆட்சியர் சுரேஷ் குமார் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்